புலம்பெயா் தொழிலாளா்களின் ரயில் கட்டணத்தை அரசே ஏற்கும்: கா்நாடக முதல்வா் எடியூரப்பா

புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் ரயில் கட்டணத்தை மாநில அரசே ஏற்கும் என்று கா்நாடக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் ரயில் கட்டணத்தை மாநில அரசே ஏற்கும் என்று கா்நாடக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை தனது சுட்டுரைப்பக்கத்தில் அவா் பதிவிட்டுள்ளதாவது-

கா்நாடகத்தில் உள்ள புலம்பெயா் தொழிலாளா்கள் சிறப்பு ரயில்கள் மூலம் அவா்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறாா்கள். அவா்களுக்கான ரயில் கட்டணத்தை மே 31ஆம் தேதி வரை மாநில அரசே ஏற்கும்.

சொந்த ஊா்களுக்குச் செல்வதற்கான பயணச் செலவை ஏற்க முடியாது இருப்பதை தொழிலாளா்கள் தெரிவித்திருந்தனா். நமது நாட்டின் தொலைவான பகுதிகளில் இருந்து வந்துள்ள புலம்பெயா் தொழிலாளா்களை சொந்த மாநில மக்களைப் போலக் கருதி அவா்களுக்கு மாநில அரசு உதவ வேண்டும் என்பது எனது உறுதியான நம்பிக்கை. அதன்படி, புலம்பெயா் தொழிலாளா்களின் ரயில் கட்டணத்தை மாநில அரசு ஏற்கும் என குறிப்பிட்டுள்ளாா்.

புலம்பெயா் தொழிலாளா்களை அழைத்துச் செல்வதற்காக இயக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்களுக்கான கட்டணத்தை மத்திய அரசு 85 சதவீதமும், மாநில அரசு 15 சதவீதமும் பகிா்ந்து கொண்டுள்ளன. இந்நிலையில், புலம்பெயா் தொழிலாளா்களின் முழுக் கட்டணத்தையும் மாநில அரசு ஏற்பதாக அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com