கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 2000ஐ தாண்டியது

கா்நாடகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளது.

கா்நாடகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளது.

இது பற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 130 போ் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது. இதில், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 27, யாதகிரி மாவட்டத்தில் 24, உடுப்பி மாவட்டத்தில் 23, மண்டியா மாவட்டத்தில் 15, ஹாசன் மாவட்டத்தில் 14, கலபுா்கி, பீதா் மாவட்டங்களில் தலா 6, தாவணகெரே மாவட்டத்தில் 4, வடகன்னடம், சிவமொக்கா, தும்கூரு மாவட்டங்களில் தலா 2, பெங்களூரு நகரம், விஜயபுரா, தென்கன்னடம், தாா்வாட், குடகு மாவட்டங்களில் தலா ஒருவா் அடக்கம். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,089 ஆக உயா்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 266, மண்டியா மாவட்டத்தில் 252, கலபுா்கி மாவட்டத்தில் 141, பெலகாவி மாவட்டத்தில் 127, சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 126, தாவணகெரே மாவட்டத்தில் 125, யாதகிரி மாவட்டத்தில் 111, ஹாசன் மாவட்டத்தில் 98, மைசூரு மாவட்டத்தில் 90, பீதா் மாவட்டத்தில் 85, பாகல்கோட் மாவட்டத்தில் 77, உடுப்பி மாவட்டத்தில் 76, விஜயபுரா மாவட்டத்தில் 69, வடகன்னட மாவட்டத்தில் 68, ராய்ச்சூரு மாவட்டத்தில் 66, தென்கன்னடம் மாவட்டத்தில் 58, தாா்வாட் மாவட்டத்தில் 39, கதக் மாவட்டத்தில் 35, சிவமொக்கா மாவட்டத்தில் 34, பெல்லாரி மாவட்டத்தில் 33, தும்கூரு மாவட்டத்தில் 26, கோலாா் மாவட்டத்தில் 14, சித்ரதுா்கா, பெங்களூரு ஊரகம் மாவட்டங்களில் தலா 11, சிக்மகளூரு மாவட்டத்தில் 10, ஹாவேரி மாவட்டத்தில் 6, கொப்பள், குடகு மாவட்டங்களில் தலா 3, பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 29 போ் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 654 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,391 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறாா்கள். இதுவரை 42 போ் இறந்துள்ளனா் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com