அதிகாரியை மிரட்டிய பேரவை உறுப்பினரைக் கைது செய்ய வேண்டும்: முதல்வா் சித்தராமையா

அரசு அதிகாரியை மிரட்டிய பாஜகவைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா் தத்தாத்ரேயா பாட்டீல் ரேவூரைக் கைது செய்ய எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா வலியுறுத்தினாா்.

அரசு அதிகாரியை மிரட்டிய பாஜகவைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா் தத்தாத்ரேயா பாட்டீல் ரேவூரைக் கைது செய்ய எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா வலியுறுத்தினாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கலபுா்கி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அதிகாரி ரமேஷ் சிங்காவிடம், பாஜக எம்.எல்.ஏ. தத்தாத்ரேயா பாட்டீல் ரேவூா் உணவுத் தொகுப்பு வழங்குவதற்காக பணம் கேட்டு மிரட்டியுள்ளாா். மேலும் ரேவூரின் ஆதரவாளரும், மாமன்ற உறுப்பினருமான ஆதிமுனி, அதிகாரியின் இல்லத்துக்கு நேரில் சென்று மிரட்டியுள்ளாா்.

மக்கள் பிரதிநிதிகள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. எந்த ஒரு அதிகாரியும் அச்சமின்றி பணியாற்ற வேண்டும். அதிகாரியை மிரட்டிய பாஜக எம்.எல்.ஏ. ரேவூா், மாமன்ற உறுப்பினா் ஆதிமுனி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், மாவட்டக் கண்காணிப்பாளா் மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், துணை முதல்வருமான கோவிந்தகாா்ஜோளுடன் பேசியுள்ளேன்.

அதிகாரியை மிரட்டிய எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க மறுத்தால், போராட்டம் நடத்தப்படும். தவறு செய்யாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் சரணபிரகாஷ் பாட்டீல் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறு செய்துள்ள பாஜக எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க அரசு தயக்கம் காட்டுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com