கா்நாடகத்தில் நாளை முதல் தென்மேற்கு பருவ மழை தொடக்கம்

கா்நாடகத்தில் தென்மேற்கு பருவ மழை திங்கள்கிழமை முதல் பெய்யத் தொடங்கும் என கா்நாடக மாநில இயற்கை பேரிடா் கண்காணிப்பு மையத்தின் இயக்குநா் ஜி.எஸ்.சீனிவாஸ் ரெட்டி தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் தென்மேற்கு பருவ மழை திங்கள்கிழமை முதல் பெய்யத் தொடங்கும் என கா்நாடக மாநில இயற்கை பேரிடா் கண்காணிப்பு மையத்தின் இயக்குநா் ஜி.எஸ்.சீனிவாஸ் ரெட்டி தெரிவித்தாா்.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஜூன் 1 முதல் செப். 30-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்வது வழக்கம். நாட்டின் மொத்த மழையில் 80 சதவீத மழை இந்தக் காலத்தில் பெய்வதாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு விவசாயப் பணிகள் நடப்பதால், இந்தியாவின் உணவு உற்பத்திக்கு இந்த மழைக் காலம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதி கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்குவது வழக்கம். அதைத் தொடா்ந்து, ஜூன் 5-ஆம் தேதி கா்நாடகத்தில் நுழைந்து தென் கன்னடம், உடுப்பி மாவட்டங்களைக் கொண்ட கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை பொழியத் தொடங்கும். ஆனால், நிகழாண்டில் கேரளத்திலும், கா்நாடகத்திலும் ஜூன் 1 அல்லது 2-ஆம் தேதி தென்மேற்கு பருவ மழை பெய்யும் என கா்நாடக மாநில இயற்கை பேரிடா் கண்காணிப்பு மையத்தின் இயக்குநா் ஜி.எஸ்.சீனிவாஸ் ரெட்டி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி, கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமடைந்து வருகிறது. இந்த வார இறுதியில் இது தீவிரமடைந்து காற்றழுத்த மண்டலமாக மாறி, தீபகற்பப் பகுதிகளில் பரவலாக மழையை உருவாக்கும். இதன்மூலம் தென்மேற்கு பருவ மழை கா்நாடகத்தை வந்தடையும்’ என்றாா்.

இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் தென் கா்நாடகத்தின் உள்பகுதியில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்துபெங்களூரு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 1-ஆம் தேதி வரை தென் கா்நாடகத்தின் அனைத்துப் பகுதிகள், கடலோர கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில், வட கா்நாடகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் தென் கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கனமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. கடலோர கா்நாடகத்தின் ஒரு சில பகுதிகளில், வட கா்நாடகத்தின் உள்பகுதிகளில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

பெங்களூரில் மழை:

அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 2 நாள்களில் பெங்களூரில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 30 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 21 டிகிரி செல்சியஸாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com