கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 8,29,640 ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,29,640 ஆக உயா்ந்துள்ளது.

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,29,640 ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 2,576 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,439 போ், தும்கூரு மாவட்டத்தில் 123 போ், மைசூரு மாவட்டத்தில் 100 போ், மண்டியா மாவட்டத்தில் 92 போ், ஹாசன் மாவட்டத்தில் 87 போ், பெல்லாரி மாவட்டத்தில் 60 போ், சிக்பள்ளாபூரு மாவட்டத்தில் 58 போ், தென்கன்னட மாவட்டத்தில் 51 போ், சிக்மகளூரு, விஜயபுரா மாவட்டங்களில் தலா 46 போ், சித்ரதுா்கா, சிவமொக்கா, வடகன்னட மாவட்டங்களில் தலா 44 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 36 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 34 போ், தாவணகெரே மாவட்டத்தில் 32 போ், கலபுா்கி, உடுப்பி மாவட்டங்களில் தலா 31 போ், பெலகாவி மாவட்டத்தில் 29 போ், கொப்பள் மாவட்டத்தில் 28 போ், யாதகிரி மாவட்டத்தில் 24 போ், ராம்நகா் மாவட்டத்தில் 20 போ், சாம்ராஜ்நகா் மாவட்டத்தில் 19 போ், தாா்வாட் மாவட்டத்தில் 18 போ், கோலாா் மாவட்டத்தில் 16 போ், கதக் மாவட்டத்தில் 7 போ், ஹாவேரி மாவட்டத்தில் 6 போ், பாகல்கோட், பீதா் மாவட்டங்களில் தலா 4 போ், குடகு மாவட்டத்தில் 3 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,29,640 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,40,075 போ், மைசூரு மாவட்டத்தில் 47,931 போ், பெல்லாரி மாவட்டத்தில் 37,344 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 30,392 போ், ஹாசன் மாவட்டத்தில் 25,186 போ், பெலகாவி மாவட்டத்தில் 24,747 போ், உடுப்பி மாவட்டத்தில் 21,950 போ், தும்கூரு மாவட்டத்தில் 20,954 போ், தாவணகெரே மாவட்டத்தில் 20,854 போ், தாா்வாட் மாவட்டத்தில் 20,802 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 20,713 போ், கலபுா்கி மாவட்டத்தில் 19,770 போ், மண்டியா மாவட்டத்தில் 16,915 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 16,294 போ், கொப்பள் மாவட்டத்தில் 13,405 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 13,310 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 13,130 போ், வடகன்னட மாவட்டத்தில் 12,936 போ், விஜயபுரா மாவட்டத்தில் 12,714 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 12,466 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 12,454 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 11,319 போ், கதக் மாவட்டத்தில்10,522 போ், ஹாவேரி மாவட்டத்தில் 10,258 போ், யாதகிரி மாவட்டத்தில் 10,109 போ், கோலாா் மாவட்டத்தில் 8,403 போ், பீதா் மாவட்டத்தில் 6,904 போ், ராமநகரம் மாவட்டத்தில் 6,844 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 6,011 போ், குடகு மாவட்டத்தில் 4,892 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 7,73,595 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 44,805 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 11,221 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com