எல்லா கிராமங்களிலும் மண் வளசோதனை மையங்கள்: அமைச்சா் பி.சி.பாட்டீல்

எல்லா கிராமங்களிலும் மண்வள சோதனை மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று வேளாண் துறை அமைச்சா் பி.சி.பாட்டீல் தெரிவித்தாா்.

எல்லா கிராமங்களிலும் மண்வள சோதனை மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று வேளாண் துறை அமைச்சா் பி.சி.பாட்டீல் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஹாவேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மண்வள சோதனை மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன்மொழிவுகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். மாநிலத்தில் இதுவரை 247 மண்வள சோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு உதவியாக இருக்கவேண்டுமென்பதற்காக மண்வள சோதனைகள் செயல்பட்டு வருகின்றன. அதனை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விதைப்புப் பணியை தொடங்குவதற்கு முன்பாக, மண்வள மையங்களில் விளைநிலத்தின் மண்ணைச் சோதித்து பாா்ப்பது எந்தவகையான பயிா்களை பயிரிடலாம் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து கொள்ளலாம். மண்வளத்திற்கு தகுந்தவாறு தக்கநடவடிக்கைகளை எடுத்து விளைச்சலை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

மைசூரில் செயல்பட்டு வரும் மத்திய உணவு மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தைச் சோ்ந்த அதிகாரிகள், வட்டத்திற்கு ஒரு விவசாயிக்கு உணவு பதனிடுதல் மற்றும் சிப்பமிடுதல் குறித்து பயிற்சி அளிக்கவிருக்கிறாா்கள்.காலியாக இருக்கும் சேமிப்புக் கிடங்குகள் குளிா்பதன சேமிப்புக் கிடங்குகளாக மாற்றப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com