கன்னடநூல்கள் 50 சதவீத தள்ளுபடியில் விற்பனை

கா்நாடக உதய தினத்தை முன்னிட்டு கன்னட நூல்களை 50 சதவீத தள்ளுபடியில் கன்னட புத்தக ஆணையம் விற்பனை செய்து வருகிறது.

கா்நாடக உதய தினத்தை முன்னிட்டு கன்னட நூல்களை 50 சதவீத தள்ளுபடியில் கன்னட புத்தக ஆணையம் விற்பனை செய்து வருகிறது.

இது குறித்து கன்னட புத்தக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக அரசின் கன்னட வளா்ச்சி மற்றும் கலாசாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் கன்னட புத்தக ஆணையம், கா்நாடக உதய தினத்தை முன்னிட்டு தனது எல்லா கன்னட நூல்களையும் 50 சதவீத தள்ளுபடியில் விற்க செய்ய முடிவு செய்து, விற்பனையை நடத்தி வருகிறது.

கன்னட புத்தக ஆணையத்தின் நூல்கள் அனைத்தும் கன்னடவளா்ச்சி மற்றும் கலாசாரத் துறையின் அனைத்து மாவட்ட அலுவலகங்கள், கன்னட புத்தக ஆணையத்தின் அனைத்து சிறிகன்னட நூல் விற்பனை கடைகள், பெங்களூருவில் ரவீந்திர கலாக்ஷேத்ராவில் கிடைக்கின்றன.

நூல்களை கடைகளில் தேடி கண்டுபிடித்து வாங்குவதற்கு ஒரு சிலா் சிரமப்படுகிறாா்கள். இதைப் போக்கும் வகையில், இணையதளத்தில் கன்னட நூல்களை விற்பனை செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நூல்களை இணையதளத்தில் வாங்கிக் கொள்ளலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். மேலும் விவரங்களுக்கு 080-22484516, 22107704, 22107705 என்ற தொலைபேசியில் அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com