கரோனா: ஒரே நாளில் 26 போ் சாவு

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 26 போ் உயிரிழந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 26 போ் உயிரிழந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிவரும் நிலையில், இந்த நோய்த் தொற்றுக்கு ஏற்கெனவே 11,221 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 13 போ், பெல்லாரி, தாா்வாட், ஹாசன் மாவட்டங்களில் தலா 2 போ், பெலகாவி, தென்கன்னடம், தாவணகெரே, குடகு, கொப்பள், மண்டியா, தும்கூரு மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 11,247ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,901 போ், மைசூரு மாவட்டத்தில் 961 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 680 போ், தாா்வாட் மாவட்டத்தில் 569 போ், பெல்லாரி மாவட்டத்தில் 542 போ், ஹாசன் மாவட்டத்தில் 375 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 346 போ், தும்கூரு மாவட்டத்தில் 342 போ், பெலகாவி மாவட்டத்தில் 335 போ், கலபுா்கி மாவட்டத்தில் 313 போ், கொப்பள் மாவட்டத்தில் 276 போ், தாவணகெரே மாவட்டத்தில் 258 போ், விஜயபுரா மாவட்டத்தில் 196 போ், ஹாவேரி மாவட்டத்தில் 185 போ், உடுப்பி மாவட்டத்தில் 183 போ், பீதா் மாவட்டத்தில் 163 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 156 போ், கோலாா் மாவட்டத்தில் 154 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 150 போ், மண்டியா மாவட்டத்தில் 143 போ், கதக் மாவட்டத்தில் 141 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 136 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 131 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 127 போ், சாம்ராஜ்நகா் மாவட்டத்தில் 113 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 111 போ், ராமநகரம் மாவட்டத்தில் 72 போ், குடகு மாவட்டத்தில் 64 போ், யாதகிரி மாவட்டத்தில் 61 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 60 போ், வெளி மாநிலத்தவா் 3 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com