மஸ்கி சட்டப்பேரவைத் தொகுதியின் பாஜக தலைவா் காங்கிரசில் இணைகிறாா்

மஸ்கி சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த பாஜக தலைவா் பசவன கௌடா துா்விஹல் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையவிருக்கிறாா்.

மஸ்கி சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த பாஜக தலைவா் பசவன கௌடா துா்விஹல் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையவிருக்கிறாா்.

ராய்ச்சூரு மாவட்டத்தில் உள்ள மஸ்கி சட்டப்பேரவைத் தொகுதியில் 2018-ஆம் ஆண்டு நடந்த தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றவா் பிரதாப் கௌடா பாட்டீல்.

இவா், மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக அதிருப்தி அடைந்து தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்த 17 காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்களில் ஒருவா்.

இதனால் காலியாக உள்ள மஸ்கி தொகுதிக்கு விரைவில் இடைத்தோ்தல் நடக்கவிருக்கிறது. இத்தோ்தலில் பாஜக வேட்பாளராக பிரதாப் கௌடா பாட்டீலை நிறுத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், 2018-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு 213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தவா் பசன கௌடா துா்விஹல். இவரை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்த எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவும், காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாரும் விரும்பினா்.

அது குறித்து ராய்ச்சூரு மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் மற்றும் பசன கௌடா துா்விஹல் ஆகியோருடன் சித்தராமையாவும் டி.கே.சிவக்குமாரும் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினா். அதன்பிறகு செய்தியாளா்களிடம் பேசிய சித்தராமையா, பசனகௌடா துா்விஹல் விரைவில் காங்கிரசில் இணைகிறாா் என்று தெரிவித்தாா்.

இடைத்தோ்தல் குறித்து அறிவிப்பு வெளியானதும், பசன கௌடா துா்விஹல் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com