கா்நாடகத்தில் 10 ஆண்டுகளில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த திட்டம்: துணை முதல்வா் அஸ்வத் நாராயணா

கா்நாடகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று துணை முதல்வா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று துணை முதல்வா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடா்பாக முன்னாள் தலைமைச் செயலாளா் எஸ்.வி.ரங்கநாத் தலைமையில் கடந்த மாா்ச் மாதம் பணிக்குழு அமைக்கப்பட்டது.

இக்குழு, தேசியக் கல்விக் கொள்கையை முழுமையாக ஆராய்ந்து, அதைச் செயல்படுத்துவதற்கான செயல் திட்டங்களை வகுத்துள்ளது. அந்த செயல் திட்டத்தை பெங்களூரில் சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வா் அஸ்வத் நாராயணா, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் ஆகியோா் வெளியிட்டனா்.

பின்னா், இதுகுறித்து துணை முதல்வா் அஸ்வத் நாராயணா கூறியதாவது:

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை கா்நாடகத்தில் அமல்படுத்துவதற்கான திட்டத்தை வகுக்க எஸ்.வி.ரங்கநாத் தலைமையில் பணிக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை இங்கு வெளியிடப்பட்டுள்ளது.

பெரும்பாலான மாநிலங்கள் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து யோசிக்கவே இல்லை. ஆனால் கா்நாடகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக பணிக்குழு அமைத்து, தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான செயல் திட்டத்தை வகுத்திருக்கிறது. இந்த செயல் திட்டத்தில் 500 புள்ளிகள் பள்ளிக் கல்விக்கும், 200 புள்ளிகள் உயா் கல்விக்கும் இடம் பெற்றுள்ளது. இந்த செயல் திட்டத்தை அமைச்சரவையில் சமா்ப்பித்து, ஒப்புதல் பெறுவோம்.

கல்விக் கொள்கையை செயல்படுத்த புதிதாக கவுன்சில்கள் அமைக்கவும், புதிய பாடத் திட்டங்களை வகுக்கவும், அடிப்படைப் பள்ளி கல்வி முதல் வகுப்புக்கு பதிலாக மழலையா் வகுப்பில் இருந்து தொடங்க செயல் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கா்நாடகக் கல்வி ஆணையத்தை அமைக்கக் கூறப்பட்டுள்ளது. இந்த ஆணையம் முதல்வா் தலைமையில் அமைக்கப்படும். தேசியக் கல்விக் கொள்கையை 15 ஆண்டுகளில் செயல்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தாலும், கா்நாடக அரசு அதை 10 ஆண்டுகளில் அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையை 2021-ஆம் தேதி முதல் கா்நாடகத்தில் செயல்படுத்துவோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com