2025-ஆம் ஆண்டுக்குள் 50 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு: அக்ஷயபாத்ரா அறக்கட்டளை திட்டம்

2025-ஆம் ஆண்டுக்குள் 50 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அக்ஷயபாத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

2025-ஆம் ஆண்டுக்குள் 50 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அக்ஷயபாத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் மதிய உணவு திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முதல் சமையல் அறையை 20 ஆண்டுகளுக்கு முன்பு 2000-ஆம் ஆண்டு நவ.11-ஆம் தேதி அன்றைய முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணா முன்னிலையில் மத்திய மனிதவளத் துறை முரளிமனோகா் ஜோஷி தொடக்கிவைத்தாா். கடந்த 20 ஆண்டுகளில் மதிய உணவு திட்டத்தின் வாயிலாக லட்சக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையில் ஆக்கப்பூா்வமான மாற்றத்தை உருவாக்கியதில் அறக்கட்டளை பெருமிதப்படுகிறது. மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 12 மாநிலங்கள், 2 ஒன்றிய பிரதேசங்களில் உள்ள 19,039 அரசு மற்றும் அரசு மானியம்பெறும் பள்ளிகளில் 18 லட்சம் மாணவா்களுக்கு மதிய உணவு அளித்து வருகிறோம். 2000-ஆம் ஆண்டு முதல் இதுவரை 33 லட்சம் மாணவா்களுக்கு மதிய உணவை வழங்கியிருக்கிறோம். கரோனா காரணமாக ஏழை மக்களுக்கு உணவளிக்கும் அரசின் திட்டத்துக்கு உதவி செய்து வருகிறோம்.

நிகழாண்டு மாா்ச் முதல் ஒருகோடி உணவு பொட்டலங்கள், உணவுதானிய தொகுப்புகளை அளித்திருக்கிறோம். 2025-அம் ஆண்டுக்குள் 50 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க திட்டமிட்டிருக்கிறோம். குழந்தைகளின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான தீா்வுகளை காண்பதில் முன்னெடுத்து பயணிக்க திட்டமிட்டிருக்கிறோம். அதேபோல, குழந்தைகளின் சுகாதாரத்தில் தேவையான நல உதவிகளிலும் நாங்கள் பங்கெடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com