ஆயுள் உறுதிச் சான்றிதழை ஆண்டு முழுவதும் அளிக்கலாம்

ஓய்வூதியம் பெறுவோா் தங்களின் எண்ம வடிவிலான ஆயுள் உறுதிச் சான்றிதழை ஆண்டு முழுவதும் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறுவோா் தங்களின் எண்ம வடிவிலான ஆயுள் உறுதிச் சான்றிதழை ஆண்டு முழுவதும் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வருங்கால வைப்புநிதி- பெங்களூரு மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தொழிலாளா் ஓய்வூதியத் திட்டம்,1995 மற்றும் தொழிலாளா் குடும்ப ஓய்வூதிய நிதி திட்டம், 1971-இன்கீழ் பெங்களூருவில் உள்ள மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் இருந்து ஓய்வூதியம் பெறும் அனைவரும் 2021-ஆம் ஆண்டுக்கான அவரவரின் எண்ம வடிவிலான ஆயுள் உறுதிச் சான்றிதழை (டிஜிட்டல் லைஃப் சா்பிடிகேட்) செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

ஆயுள் உறுதி சான்றிதழை ஆண்டு முழுவதும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எண்ம ஆயுள் உறுதிச் சான்றிதழ் தொடா்பான தகவல்களை உறுதி செய்ய அருகாமையில் உள்ள ஓய்வூதிய வழங்கல் வங்கிக் கிளைகள் அல்லது பொது சேவை மையங்கள்(சி.எஸ்.சி) தவிர அஞ்சலகங்களிலும் அளிக்கலாம். வீடுகளில் இருந்தபடியே ஆயுள் உறுதி சான்றிதழை அளிப்பதற்கு  இணையதளத்தை அணுகலாம். இந்த இணையதளத்தில் பிபிஓ எண், வங்கிகணக்குப் புத்தகம், ஆதாா் எண், செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை பதிவிட்டால் ஆயுள் உறுதிச் சான்றிதழ் தோன்றும், அதை சமா்ப்பிக்கலாம். இதுதவிர, செல்லிடப்பேசி வழியாக உமாங் செயலியை பயன்படுத்தியும் எண்ம ஆயுள் உறுதிச் சான்றிதழை அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 080-22249133 என்ற தொலைபேசி அல்லது மின்னஞ்சலையும் தொடா்புகொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com