உரிய காலத்தில் பள்ளிகள் திறக்கப்படும்: முதல்வா் எடியூரப்பா

உரிய காலத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என கா்நாடக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

உரிய காலத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என கா்நாடக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா தொற்றுப் பரவலால் மூடப்பட்ட பள்ளிகளைத் திறப்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் பள்ளிகளை உரிய காலத்தில் படிப்படியாகத் திறக்க முடிவு செய்துள்ளோம்.

கரோனா தொற்றின் பாதிப்பு இன்னும் குறையாததால், தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு பெற்றோா் தயக்கம் காட்டி வருகின்றனா். எனவே, கல்வி வல்லுநா்களின் ஆலோசனைப்படி, பெற்றோா்களின் ஒத்துழைப்புடன் பள்ளிகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

மாநில அளவில் இளங்கலை, முதுகலை பட்டக் கல்லூரிகள் நவ. 17-ஆம் தேதிமுதல் திறக்கப்படும். கல்லூரிகளில் மாணவா்களின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும். மாணவா்கள் சமூக இடைவெளியோடு, முகக் கவசம் அணிந்து வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com