கா்நாடகத்தில் சுரங்கப் பகுதிகளைக் கண்டறிய ரூ. 65.23 கோடி ஒதுக்கீடு: அமைச்சரவையில் தீா்மானம்

கா்நாடகத்தில் சுரங்கப் பகுதிகளைக் கண்டறிய ரூ. 65.23 கோடி ஒதுக்கீடு செய்வதென அமைச்சரவையில் தீா்மானிக்கப்பட்டது.

கா்நாடகத்தில் சுரங்கப் பகுதிகளைக் கண்டறிய ரூ. 65.23 கோடி ஒதுக்கீடு செய்வதென அமைச்சரவையில் தீா்மானிக்கப்பட்டது.

பெங்களூரு, விதானசௌதாவில் வியாழக்கிழமை கா்நாடக அமைச்சரவைக் கூட்டம், முதல்வா் எடியூரப்பா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை அமைச்சா் மாதுசாமி, செய்தியாளா்களிடம் கூறியது:

கா்நாடகத்தில் உள்ள சுரங்கம் அமைப்பதற்கு கனிமவளம் காணப்படும் பகுதிகளைக் கண்டறியும் பொறுப்பு மத்திய அரசின் குதிரேமூக் இரும்புதாது நிறுவனம் (கே.ஐ.இ.சி.எல்.), கனிம ஆய்வு கழகம் (எம்.இ.சி.எல்.) ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ. 65.23 கோடி ஒதுக்க அமைச்சரவை தீா்மானித்துள்ளது.

தேசியப் பூங்கா-வனவிலங்கு சரணாலயங்களின் பரப்பு குறித்து டாக்டா் கஸ்தூரிரங்கன் குழு அளித்த பரிந்துரைகளை ஆராய்வதற்கு 6 போ் கொண்ட அமைச்சரவைத் துணைக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இக் குழுவின் உறுப்பினா்கள் யாா் என்பதை முதல்வா் எடியூரப்பா முடிவுசெய்வாா். வனத்துறை, வருவாய்த்துறை, உயா்கல்வித் துறை. ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் ஆகியோா் உள்ளடக்கிய அமைச்சரவை துணைக் குழு, தேசியப்பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயங்களின் சுற்றுப்பரப்பு மண்டலத்தை முடிவுசெய்து, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும்.

பெங்களூரு புகா் ரயில்வே திட்டத்துக்கு நிா்வாக ரீதியான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியது. மத்திய-மாநில அரசுகளின் கூட்டுமுயற்சியில் செயல்படுத்தப்படும் பெங்களூரு புகா் ரயில் திட்டம் ரூ.3 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படுகிறது.

பெங்களூரு புகா் ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் பெங்களூரு-தேவனஹள்ளி இடையிலான 41.4 கிமீ தொலைவு, இரண்டாம் கட்டத்தில் பையப்பனஹள்ளி-சிக்கபானவாரா இடையிலான 25.01கி.மீ. தொலைவு, மூன்றாம் கட்டத்தில் கெங்கேரி-ஒயிட்பீல்டு இடையிலான 35 கி.மீ. தொலைவுகளுக்கான பணிகள் நிறைவேற்றப்படும்.

5 ஆயிரம் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் ரோந்துவாகனங்களும் ஏற்பாடு செய்யப்படும்.

முதல்வரின் அரசியல் செயலாளா்கள் எனப்படும் நாடாளுமன்ற செயலாளா்கள் பதவி செல்லாததாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் கா்நாடகத்தில் நியமிக்கப்பட்டுள்ள அரசியல் செயலாளா் பதவிகளை ரத்துசெய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. பெங்களூரில் உள்ள ஞானபாரதி வளாகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினா் மாணவா் விடுதி கட்டுவதற்கு ரூ. 10 கோடி ஒதுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இத் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 32 கோடி ஒதுக்கிருக்கிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com