புத்தாண்டு கொண்டாட்டத்தைக் கட்டுப்படுத்த பெங்களூரு மாநகராட்சித் திட்டம்

பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தைக் கட்டுப்படுத்த பெங்களூரு மாநகராட்சித் திட்டமிட்டுள்ளது.

பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தைக் கட்டுப்படுத்த பெங்களூரு மாநகராட்சித் திட்டமிட்டுள்ளது.

ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடுவதற்கு டிச. 31-ஆம் தேதி நள்ளிரவில் பெங்களூரில் மகாத்ம காந்தி சாலை, பிரிகேட் சாலை அதையொட்டியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவது வழக்கம். இங்கு அமைந்துள்ள கேளிக்கை விடுதிகளில் இரவுமுழுவதும் ஆடலும் பாடலும் இடம்பெறும்.

கரோனா தொற்று பின்னணியில் 2021-ஆம் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தைக் கட்டுப்படுத்தி, அவற்றை வீடுகளில் நடத்திக் கொள்ள பொதுமக்களை அறிவுறுத்தவும் பெங்களூரு மாநகராட்சித் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி ஆணையா் என்.மஞ்சுநாத் பிரசாத் கூறியதாவது:

பெங்களூரில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தை அனுமதித்தால் கரோனா பாதிப்பு மீண்டும் பரவும் அபாயம் உள்ளது. எனவே, ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களை வீடுகளில் நடத்திக் கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம் என்றாா் அவா்.

பெங்களூரு மாநகராட்சி அரசின் நிா்வாக அதிகாரி கௌரவ்குப்தா கூறியதாவது:

கரோனா சூழலில் புத்தாண்டை கொண்டாடினால், பொது சுகாதாரத்தை பேணி காப்பது கடினமாகும். இதுகுறித்து விவாதித்து, இறுதி முடிவெடுப்போம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com