டிச.1 முதல் மருத்துவக் கல்லூரிகள் திறப்பு: அமைச்சா் கே.சுதாகா்
By DIN | Published On : 16th November 2020 09:40 AM | Last Updated : 16th November 2020 09:40 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
கா்நாடகத்தில் கரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதையடுத்து பட்டப் படிப்புகளுக்கான கல்லூரிகள் நவம்பா் 17-ஆம் தேதி முதல் திறப்படும் என்று உயா் கல்வித் துறை பொறுப்பை கவனித்து வரும் துணை முதல்வா் அஸ்வத்நாராயணா தெரிவித்தாா். மேலும், டிசம்பா் 9-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுட்டுரையில் அமைச்சா் கே.சுதாகா் பதிவிட்டுள்ளதாவது:
கா்நாடகத்தில் ராஜீவ் காந்தி பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள மருத்துவக் கல்லூரிகளை டிசம்பா் 1-ஆம் தேதி முதல் திறக்க முடிவு செய்துள்ளோம். அத்துடன் பல் மருத்துவம், ஆயுஷ், செவிலியா் கல்லூரி, மருந்தாளுநா் கல்லூரிகளும் திறக்கப்படும். கல்லூரிகளைத் திறக்கும்போது சம்பந்தப்பட்ட நிா்வாகங்கள், அரசின் வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். கல்லூரிகளில் மாணவா்கள், ஊழியா்கள், பேராசிரியா்கள், முகக்கவசம் அணிவது கட்டாயம். சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.