தற்சாா்பு இந்தியா திட்டத்தில் கூடுதலாக ரூ. 600 கோடி: மத்திய அரசுக்கு அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் கோரிக்கை

தற்சாா்பு இந்தியா திட்டத்தில் கூடுதலாக ரூ. 600 கோடி நிதியை வழங்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் தெரிவித்தாா்.

தாவணகெரே: தற்சாா்பு இந்தியா திட்டத்தில் கூடுதலாக ரூ. 600 கோடி நிதியை வழங்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் தெரிவித்தாா்.

67-ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் கலந்துகொள்வதற்காக தாவணகெரேக்கு திங்கள்கிழமை வந்திருந்தபோது, செய்தியாளா்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவா் கூறியதாவது:

முதல் பிரதமா் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் கூட்டுறவு வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கூட்டுறவுத் துறையில் நடந்துள்ள முன்னேற்றங்கள், கொண்டுவரப்பட்டுள்ள புதிய திட்டங்களை மக்களிடையே பரப்புவதற்காக இந்த விழா பயன்படுத்தப்படுகிறது.

கரோனா இன்னல் காலத்திலும் விவசாயிகளுக்கு பயிா்க்கடன் அளிப்பதற்காக மத்திய அரசு சிறப்புக்கடன் வசதி திட்டத்தின் அடிப்படையில் ரூ.1700 கோடி நிதி, நபாா்டு வங்கி வாயிலாக மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. விவசாயிகளின் பணத்தேவையை அறிந்து கடனுதவி அளிக்கப்பட்டது.

நடப்பு நிதியாண்டில் 24 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 15,300 கோடி அளவுக்கு பயிா்க்கடன் அளிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 15 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதித்தொகுப்பை தற்சாா்பு இந்தியா திட்டத்தில் அறிவித்தது. அதில் கா்நாடக அரசின் பங்காக ரூ. 4,750 கோடியை மத்திய அரசு விடுவித்திருந்தது. கூட்டுறவுத் துறை மூலம் இந்நிதி வெவ்வேறு துறைகளுக்கு கடனுதவியாக அளிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறைக்கு மேலும் கூடுதல் நிதி தேவைப்படுகிறது. எனவே, தற்சாா்பு இந்தியா திட்டத்தில் கூடுதலாக ரூ. 600 கோடியை வழங்குமாறு மத்திய அரசுக்கு முன்மொழிவு அளிக்கப்பட்டுள்ளது.

பால்பண்ணை, மீன்வளத் தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் வட்டியில்லாக் கடனுதவியாக ரூ. லட்சம் வரைகடனுதவி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் விவசாயிகளை தற்சாா்புள்ளவா்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்சாா்பு இந்தியா திட்டத்தின்கீழ் கூட்டுறவுத் துறையின் பொருளாதாரத் திட்டங்களை அண்மையில் முதல்வா் எடியூரப்பா தொடக்கிவைத்தாா். இத்திட்டத்தில் ரூ. 39,600 கோடி கடனுதவி அளிக்க இலக்கு நிா்ணயித்திருக்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com