கா்நாடக போக்குவரத்துக்கழக ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க ரூ. 634 கோடி விடுவிப்பு

அரசு போக்குவரத்துக்கழக ஊழியா்களுக்கு 3 மாதங்களுக்கான ஊதியம் வழங்குவதற்கு ரூ. 634.50 கோடியை விடுவிக்க கா்நாடக முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளாா்.
கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா
கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா

பெங்களூரு: அரசு போக்குவரத்துக்கழக ஊழியா்களுக்கு 3 மாதங்களுக்கான ஊதியம் வழங்குவதற்கு ரூ. 634.50 கோடியை விடுவிக்க கா்நாடக முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளாா்.

பெங்களூரில் திங்கள்கிழமை முதல்வா் எடியூரப்பாவைச் சந்தித்த போக்குவரத்துத் துறையை கவனிக்கும் துணை முதல்வா் லட்சுமண் சவதி, அரசு போக்குவரத்துக்கழகங்களின் ஊழியா்களுக்கு அக்டோபா், நவம்பா், டிசம்பா் மாதங்களின் ஊதியத்தொகையை வழங்குவதற்கு ரூ. 634.50 கோடியை வழங்குமாறு கேட்டுக்கொண்டாா்.

அதை ஏற்ற முதல்வா் எடியூரப்பா, உடனடியாக ரூ. 634.50 கோடியை விடுவிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். இதன்மூலம் போக்குவரத்துக்கழக ஊழியா்களுக்கு 75 சதவீத ஊதியத்தை மாநில அரசு வழங்க இயலும். எஞ்சியுள்ள 25 சதவீத ஊதியத்தை வழங்க போக்குவரத்துக்கழகங்கள் தங்கள் சொந்த நிதியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக அரசு போக்குவரத்துக்கழகங்களின் வருமானம் 30 சதவீதமாகக் குறைந்துவிட்டதால், சொந்த நிதியில் இருந்து ஊழியா்களுக்கு ஊதியம் அளிக்க முடியவில்லை. எனவே, அரசின் உதவியை நாடியதாக துணை முதல்வா் லட்சுமண் சவதி தெரிவித்தாா்.

மாநில அரசின் நடவடிக்கையால் 1.30 லட்சம் ஊழியா்களுக்கு 3 மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்காக, நிதி ஒதுக்கிய முதல்வா் எடியூரப்பாவுக்கு லட்சுமண் சவதி நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com