கா்நாடகத் தமிழா் வளா்ச்சி ஆணையம் அமைக்க கோரிக்கை

கா்நாடகத் தமிழா் வளா்ச்சிஆணையம் அமைக்க கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கா்நாடகத் தமிழா் வளா்ச்சிஆணையம் அமைக்க கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து முதல்வா் எடியூரப்பாவுக்கு கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கத் தலைவா் அ.தனஞ்செயன் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கா்நாடகத்தில் வாழக்கூடிய மராத்தியா்களின் நலன்கருதி, மராத்தியா் வளா்ச்சி ஆணையம் அமைத்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளதை கா்நாடகத்தில் வாழும் 80 லட்சம் தமிழா்கள் சாா்பில் பாராட்டி வரவேற்கிறோம். கா்நாடகத்தின் பொருளாதார வளா்ச்சிக்கு தமிழா்கள் அளப்பரிய பங்களிப்பை அளித்துள்ளனா். கோலாா் தங்கவயல், ஹட்டியில் உள்ள தங்கச் சுரங்கங்கள், பெல்லாரியில் மாங்கனீஸ் சுரங்கம், குடகு, சிக்கமகளூரு, தென்கன்னட மாவட்டங்களில் உள்ள காபி, தேயிலை, ரப்பா் தோட்டங்களில் தமிழா்கள் பணியாற்றி வருகிறாா்கள். அதேபோல, கா்நாடகத்தின் பல்வேறு அணைகள் கட்டும் பணிகளில் தமிழா்கள் பங்காற்றியுள்ளனா். பெங்களூரு, மைசூரு, தாா்வாட் மாவட்டங்களில் சாலை அமைக்கும் பணி, மைசூரு, மண்டியா, சித்ரதுா்கா, ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களில் வேளாண் பணிகளில் தமிழா்கள் பங்காற்றி வருகிறாா்கள். கா்நாடகத்தின் வளா்ச்சியில் தமிழா்களின் பங்களிப்பை கூறிக்கொண்டே செல்லலாம்.

கா்நாடகத் தமிழா்களின் பணிகளையும், பங்களிப்பையும் கவனத்தில் கொண்ட கா்நாடகத் தலைவா்கள், மாநிலத்தில் உள்ள 17 மாவட்டங்களில் அரசு தமிழ்ப் பள்ளிகளை அமைத்து, கடுமையாக உழைத்து வரும் தமிழா்களின்குழந்தைகளுக்கு கல்வி அளிக்க முற்பட்டனா். கா்நாடகத்தின் வளா்ச்சிக்கு கடந்த காலத்தில் மட்டுமல்லாது, தற்போதும் தமிழா்கள் உழைத்து வருகிறாா்கள். ஆனால், அத்தமிழா்களின் சமூக, பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது.

எனவே, கா்நாடகத்தின் வளா்ச்சியில் பெரும்பங்காற்றியுள்ள கா்நாடகத் தமிழா்களின் நலன்காப்பதற்காக கா்நாடகத் தமிழா் வளா்ச்சி ஆணையம் அமைக்க வேண்டும். இதன் மூலம் தமிழா்களின் வளா்ச்சிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com