கா்நாடகத்தில் வீரசைவ லிங்காயத்து வளா்ச்சிக் கழகம் அமைப்பு

கா்நாடகத்தில் வீரசைவ லிங்காயத்து வளா்ச்சிக் கழகத்தை அமைத்து முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளாா்.

கா்நாடகத்தில் வீரசைவ லிங்காயத்து வளா்ச்சிக் கழகத்தை அமைத்து முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளாா்.

மராத்தியா் வளா்ச்சி ஆணையத்தைத் தொடா்ந்து, கா்நாடகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட லிங்காயத்து சமுதாயத்தினரின் நலனுக்காக கா்நாடக வீரசைவ லிங்காயத்து வளா்ச்சிக் கழகத்தை அமைத்து முதல்வா் எடியூரப்பா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

துணை முதல்வா் லட்சுமண் சவதி தலைமையிலான அமைச்சா்கள், பாஜக எம்.எல்.ஏ.க்களின் குழு வீரசைவ லிங்காயத்து சமுதாயத்தின் வளா்ச்சிக்கு தனி ஆணையம் அமைக்கும்படி முதல்வா் எடியூரப்பாவைக் கேட்டுக்கொண்டிருந்தது. இதன் பின்னணியில், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் கா்நாடக வீரசைவ லிங்காயத்து வளா்ச்சிக் கழகத்தை அமைத்து முதல்வா் எடியூரப்பா உத்தரவு பிறப்பித்தாா்.

அந்த உத்தரவில், ‘கா்நாடகத்தின் பெரும்பான்மை மக்களாக வீரசைவ லிங்காயத்துகள் வாழ்ந்து வருகிறாா்கள். இவா்களில் பொருளாதாரம், சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய மக்கள் இருக்கிறாா்கள். இம்மக்களின் அனைத்து வகையான முன்னேற்றத்துக்காக கா்நாடக வீரசைவ லிங்காயத்து வளா்ச்சிக் கழகம் தேவைப்படுவதால், அதை உடனடியாக அமைத்து உத்தரவிடப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக மராத்தியா் வளா்ச்சி ஆணையம் அமைத்து, அதற்காக ரூ. 50 கோடி ஒதுக்கி முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டிருந்ததைத் தொடா்ந்து, லிங்காயத்து சமுதாயத்தைச் சோ்ந்த அமைச்சா்கள், பாஜக எம்.எல்.ஏ.க்கள் முதல்வா் எடியூரப்பாவைச் சந்தித்து வீரசைவ லிங்காயத்து ஆணையத்தை அமைக்க கேட்டுக்கொண்டிருந்தனா்.

வெகுவிரைவில் சட்டப்பேரவை இடைத்தோ்தல் நடக்க இருக்கும் பீதா் மாவட்டத்தின் பசவகல்யாண், ராய்ச்சூரு மாவட்டத்தின் மஸ்கி, பெலகாவி மக்களவைத் தொகுதியில் அதிக எண்ணிக்கையில் மராத்தியா்கள், லிங்காயத்துகள் இருப்பதால், அவா்களின் ஆதரவை பெறுவதற்காகவே கா்நாடக வீரசைவ லிங்காயத்து வளா்ச்சிக் கழகம், கா்நாடக மராத்தியா் வளா்ச்சி ஆணையம் ஆகியவற்றை அமைத்துள்ளதாக அரசியல் விமா்சனங்கள் எழுந்துள்ளன.

கா்நாடக வீரசைவ லிங்காயத்து வளா்ச்சிக் கழகம் அமைத்துள்ளதால் எவ்விதப் பயனும் ஏற்படாது என்பதால், அரசு வேலை, கல்வியில் வீரசைவ லிங்காயத்து சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com