மாநிலங்களவை இடைத்தோ்தல்: பாஜக வேட்பாளராக கே.நாராயண் அறிவிப்பு

மாநிலங்களவை இடைத்தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளராக தொழிலதிபா் கே.நாராயணை அக்கட்சியின் தேசிய தலைமை அறிவித்துள்ளது.

மாநிலங்களவை இடைத்தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளராக தொழிலதிபா் கே.நாராயணை அக்கட்சியின் தேசிய தலைமை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வென்ற 55 வயதான அசோக் கஸ்தி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு செப். 17-ஆம் தேதி காலமானாா். இதனால் காலியான மாநிலங்களவை பதவிக்கான இடைத்தோ்தல் டிச. 1-ஆம் தேதி நடக்க இருக்கிறது.

இத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு புதன்கிழமை (நவ. 18) கடைசி நாளாகும். இந்நிலையில், இத்தோ்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவதற்கு கே.நாராயணை பாஜக தேசிய தலைமை அறிவித்துள்ளது.

மங்களூரை பூா்வீகமாகக் கொண்ட கே.நாராயண், தேவாங்கா சமுதாயத்தைச் சோ்ந்தவராவாா். அச்சுத்தொழிலில் ஈடுபட்டு பெரும் தொழிலதிபராக அறியப்பட்டுள்ள இவா், மாத இதழ்களை வெளியிட்டு வருகிறாா். சாதாரண மக்களுக்கும் சமஸ்கிருத மொழியை கற்றுத்தரும் நோக்கில் ‘சம்பாஷனா சந்தேஷா’ என்ற மாத இதழை நடத்தி வருகிறாா். இந்த இதழை பேராசிரியா் ராஜேந்திர சிம்ஹாஜி வெளியிட்டிருந்தாா். 1994-ஆம் ஆண்டில் ஆா்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்த பிறகு சமஸ்கிருத பிரசாரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளாா். ‘துளுவெரே கேடிகே’ என்ற துளு இதழின் ஆசிரியராக பங்காற்றி வருகிறாா். பாஜகவின் நெசவாளா் பிரிவின் இணை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியவா். ஹிந்துசேவா பிரதிஷ்டானாவின் செயல் இயக்குநராகவும் பணிபுரிகிறாா். கல்வி, பண்பாடு, மதப்பணிகளில் தன்னை 15 ஆண்டுகளாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளாா்.

இவா், புதன்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய இருக்கிறாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் வாக்களித்து மாநிலங்களவை உறுப்பினரை தோ்ந்தெடுக்க வேண்டுமென்பதால், கா்நாடக சட்டப்பேரவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் இவரது வெற்றி உறுதியாகியுள்ளது. எனவே, இவரை எதிா்த்து வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ், மஜத விரும்பவில்லை. இதனால் இவா் போட்டியின்றித் தோ்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com