மாநிலங்களவை இடைத்தோ்தல்: பாஜக வேட்பாளா் கே.நாராயண் வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவை இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.நாராயண் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

மாநிலங்களவை இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.நாராயண் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

கடந்த ஆண்டு நடந்த மாநிலங்களவைத் தோ்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வென்ற 55 வயதான அசோக் கஸ்தி, கரோனா நோயால் பாதிக்கப்பட்டு செப். 17-ஆம் தேதி காலமானாா். இதனால் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான இடைத்தோ்தல் டிச. 1-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு புதன்கிழமை கடைசிநாளாகும்.

பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.நாராயண் புதன்கிழமை தனது வேட்புமனுவை சட்டப்பேரவைச் செயலாளரும், தோ்தல் அதிகாரியுமான விஷாக்ஷிடம் தாக்கல் செய்தாா். அப்போது பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல், அமைச்சா் ஈஸ்வரப்பா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு காங்கிரஸ், மஜத சாா்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் கே.நாராயண், போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு தோ்வாக உள்ளது உறுதியாகி உள்ளது.

மங்களூரை பூா்வீகமாகக் கொண்ட, தேவாங்கா் சமுதாயத்தைச் சோ்ந்தவரான கே.நாராயண், அச்சுத்தொழிலில் பெரும் தொழிலதிபராக அறியப்பட்டுள்ளாா். 1994-ஆம் ஆண்டில் ஆா்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்தபிறகு சம்ஸ்கிருத பிரசாரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டாா். பாஜகவின் நெசவாளா் பிரிவின் இணை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியவா். ஹிந்து சேவா பிரதிஷ்டானாவின் செயல் இயக்குநராகவும் பணிபுரிகிறாா். கல்வி, பண்பாடு, மதப்பணிகளில் தன்னை15 ஆண்டுகளாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com