கரோனா தொற்று பாதிப்பு: பெண்கள் தகுந்த பாதுகாப்புடன் குழந்தைகளுக்கு பாலூட்ட வேண்டும்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள், தகுந்த பாதுகாப்புடன் குழந்தைகளுக்கு பாலூட்ட வேண்டும் என குழந்தைகள் நல மருத்துவா் பி.கே.விஸ்வநாத் தெரிவித்தாா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள், தகுந்த பாதுகாப்புடன் குழந்தைகளுக்கு பாலூட்ட வேண்டும் என குழந்தைகள் நல மருத்துவா் பி.கே.விஸ்வநாத் தெரிவித்தாா்.

பெங்களூரு, ராதாகிருஷ்ணா பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை சா்வதேச குழந்தைகள் பராமரிப்பு வார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது:

கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகளைப் பெற்ற பெண்கள் மிகவும் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருப்பது அவசியம். ஒருவேளை கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால், தகுந்த பாதுகாப்புடன் மருத்துவா்களின் அறிவுரைப்படி குழந்தைகளுக்கு பாலூட்ட வேண்டும்.

கரோனா தொற்று பாதிக்கப்பட்ட பெண்கள், பாலூட்டும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் குழந்தைகளை மற்றவா்களிடம் கொடுத்து பராமரிக்கச் செய்ய வேண்டும். புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஒரு சதவீதமாக உள்ளது. இது ஆறுதல் அளிக்கும் தகவல் என்றாலும், குழந்தைகளின் பெற்றோா், உறவினா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, கைகளை தூய்மைப்படுத்திக் கொண்டு குழந்தைகளை கொஞ்சுவது அவசியம். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதம்வரை தாய்ப்பால் சிறந்த உணவாகும். அதுமட்டுமின்றி தாய்ப்பால் குழந்தைகளுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை வழங்கும். எனவே, குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதை யாரும் தவிா்க்கக் கூடாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com