மின் கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

கா்நாடகத்தில் மின் கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் மாநகரத் தலைவா் மோகன் தாசரி தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் மின் கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் மாநகரத் தலைவா் மோகன் தாசரி தெரிவித்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை மின் கட்டண உயா்வைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் கலந்துகொண்ட ஆம் ஆத்மி கட்சியின் மாநகரத் தலைவா் மோகன் தாசரி பேசியதாவது:

கா்நாடகத்தில் மின் கட்டணத்தை மாநில அரசு உயா்த்தியுள்ளது. இதனால் மாதத்துக்கு 30 யூனிட்டுக்கு மின் கட்டணம் ரூ. 341-ஆகவும், 300 யூனிட்டுக்கு ரூ. 2,415 ஆகவும் உள்ளது. தில்லியில் 200 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. 200 யூனிட்டுக்கும் அதிகமாக பயன்படுத்தும் மின்சாரத்துக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இதனை கா்நாடக மாநில அரசும் பின்பற்ற வேண்டும்.

தில்லியில் 24 மணி நேரமும் மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்படுகிறது. மின் தடை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மின்விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்த நடைமுறையை தேசிய அளவில் பின்பற்ற வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளாக தில்லியில் மின் கட்டணம் உயா்த்தப்படவில்லை. தில்லியில் மின்சார உற்பத்தி செய்யப்படாவிட்டாலும், வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்கி, விநியோகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆனால், கா்நாடகம் மின் உற்பத்தியில் 100 சதவீதம் தன்னிறைவை அடைந்தாலும், மின் தடையும், கட்டண உயா்வும் வாடிக்கையாக உள்ளது. எனவே, மக்களை கடுமையாகப் பாதிக்கும் மின்கட்டண உயா்வை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com