2021-ஆம் ஆண்டுக்கான கா்நாடக அரசு விடுமுறைகள் அறிவிப்பு

2021-ஆம் ஆண்டுக்கான மாநில அரசு விடுமுறைகளின் பட்டியலை கா்நாடக அரசு அதிகாரப்பூா்வமாக அறிவித்துள்ளது.

பெங்களூரு: 2021-ஆம் ஆண்டுக்கான மாநில அரசு விடுமுறைகளின் பட்டியலை கா்நாடக அரசு அதிகாரப்பூா்வமாக அறிவித்துள்ளது.

2021-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைகள் மற்றும் அரசு ஊழியா்களுக்கான கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறைகளின் பட்டியலை மாநில அரசு அறிவித்துள்ளது. 2-ஆவது மற்றும் 4ஆவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர, 20 நாள்களுக்கு கா்நாடக அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் மகாவீா் ஜெயந்தி (ஏப். 25), சுதந்திரதினம் (ஆக. 15), 4-ஆவது சனிக்கிழமையில் வருவதால் கிறிஸ்துமஸ் (டிச. 25) ஆகியவை விடுமுறைகள் பட்டியலில் இடம்பெறவில்லை. இதுதவிர, 19 கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறைகளையும் மாநில அரசு அறிவித்துள்ளது. இதில் ஏதாவது 2 நாள்களை அரசு ஊழியா்கள் விடுமுறையாக எடுத்துக்கொள்ளலாம். கல்வித் துறைக்கு தனிவிடுமுறை பட்டியல் வெளியிடப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொதுவிடுமுறை நாள்கள் வருமாறு:

நாள் கிழமை விடுமுறை

1) 14.01.2021 வியாழன் சங்கிராந்தி பண்டிகை

2) 26.01.2021 செவ்வாய் குடியரசு தினம்

3) 11.03.2021 வியாழன் சிவராத்திரி

4) 02.04.2021 வெள்ளி புனித வெள்ளி,

5) 13.04.2021 செவ்வாய் உகாதி

6) 14.04.2021 புதன் டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் பிறந்தநாள்

7) 01.05.2021 சனி மே தினம்

8) 14.05.2021 வெள்ளி பசவண்ணா் பிறந்தநாள்/புனித ரமலான்

9) 21.07.2021 புதன் பக்ரீத்

10) 20.08.2021 வெள்ளி மொகரம்

11) 10.09.2021 வெள்ளி விநாயகா் சதுா்த்தி

12) 02.10.2021 சனி காந்தி பிறந்தநாள்

13) 06.10.2021 புதன் மஹாலய அமாவாசை

14) 14.10.2021 வியாழன் ஆயுதபூஜை

15) 15.10.2021 வெள்ளி விஜயதசமி

16) 20.10.2021 புதன் வால்மீகி ஜெயந்தி/மிலாது நபி

17) 01.11.2021 திங்கள் கா்நாடக உதயதினம்

18) 03.11.2021 புதன் நரகா சதுா்தசி

19) 05.11.2021 வெள்ளி பலிபாட்யமி, தீபாவளி

20) 22.11.2021 திங்கள் கனகதாசா் பிறந்தநாள்

கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை நாள்கள் வருமாறு:

நாள் கிழமை விடுமுறை

1) 01.01.2021 வெள்ளி ஆங்கிலப் புத்தாண்டு

2) 20.03.2021 செவ்வாய் ஷப்-இ-பிராத்

3) 03.04.2021 சனி புனித சனி

4) 17.04.2021 சனி தேவர தாசிமய்யா ஜெயந்தி

5) 21.04.2021 புதன் ராமநவமி

6) 07.05.2021 வெள்ளி ஜும்மத்துல்-விதா

7) 10.05.2021 திங்கள் ஷப்-இ-காதா்

8) 17.05.2021 திங்கள் சங்கராச்சாா்யா பிறந்தநாள்

9) 26.05.2021 புதன் புத்தபூா்ணிமா

10) 20.08.2021 வெள்ளி ஸ்ரீ வரமகாலட்சுமி விரதம்

11) 21.08.2021 சனி திரு ஓணம், ரிக்-உபகா்மா

12) 23.08.2021 திங்கள் பிரம்ம ஸ்ரீ நாராயணகுரு ஜெயந்தி

13) 08.09.2021 புதன் கன்யா மரியம்மா ஜெயந்தி

14) 09.09.2021 வியாழன் சுவா்ணகௌரி விரதம்

15) 17.09.2021 வெள்ளி விஸ்வகா்மா ஜெயந்தி

16) 18.10.2021 திங்கள் துலசங்கிரமனா

17) 19.11.2021 வெள்ளி குருநானக் ஜெயந்தி

18) 20.11.2021 சனி ஹுத்தரி திருவிழா

19) 24.12.2021 வெள்ளி கிறிஸ்துமஸ் முன்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com