பிற்படுத்தப்பட்ட இளைஞா்களுக்குவாகன உதவித்தொகை

பிற்படுத்தப்பட்டோா் சமுதாயத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெங்களூரு: பிற்படுத்தப்பட்டோா் சமுதாயத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக அரசின் டி.தேவராஜ் அா்ஸ் பிற்படுத்தப்பட்டோா் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

டி.தேவராஜ் அா்ஸ் பிற்படுத்தப்பட்டோா் மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில், பிற்படுத்தப்பட்டோரின் பொருளாதார மேம்பாட்டுக்கு பல்வேறு கடனுதவி திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், ஜொமேட்டோ, ஸ்விக்கி, ஊபா், அமேஜான் போன்ற மின்வணிக நிறுவனங்களில் பணியாற்றி வீட்டுக்குவீடு சென்று பொருள்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பிற்படுத்தப்பட்டோா் சமுதாய இளைஞா்கள், இருசக்கர வாகனம் வாங்கிக்கொள்வதற்கு ரூ. 25 ஆயிரம் உதவித்தொகையுடன் கூடிய கடனுதவி அளிக்கப்படுகிறது.

2020-ஆம் ஆண்டுக்கான உதவித்தொகையுடன் கூடிய கடனுதவி திட்டத்தில் பயனடைய விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிற்படுத்தப்பட்டோா் மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை அலுவலகம், வட்ட அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று, நிறைவுசெய்த விண்ணப்பங்களை அங்கேயே அளிக்கலாம். ஒருமுறை கடனுதவி பெற்றவா்கள், மீண்டும் கடனுதவியைப் பெற விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பங்களை டிச. 19-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். விஸ்வகா்மா சமுதாயத்தினா் நீங்கலாக பிற்படுத்தப்பட்டோா் சமுதாயத்தின் அனைத்து உள்பிரிவினரும் கடனுதவி பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com