மீனவா்களின் பாதுகாப்புக்கு அரசு துணையாக இருக்கும்

மீனவா்களின் பாதுகாப்புக்குஅரசு துணையாக இருக்கும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு: மீனவா்களின் பாதுகாப்புக்குஅரசு துணையாக இருக்கும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு, விதானசௌதாவில் சனிக்கிழமை நடைபெற்ற உலக மீன்வள தின விழாவைத் தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:

மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மீனவா்களின் வருமானத்தை பெருக்குவதோடு, அவா்களின் பாதுகாப்புக்கும் அரசு துணையாக இருக்கும். கா்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் மீனவா்கள் வாங்கியிருந்த ரூ. 60 கோடி கடனுதவியை தள்ளுபடி செய்தோம். மீனவா்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளது. நிகழ் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மீன்வளத் துறைக்கு ரூ. 251.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்வள திட்டத்தின்கீழ் மாநில அரசின் செயல்திட்டத்துக்கு ரூ. 137 கோடி நிதியுதவி மத்திய அரசிடம் இருந்து கிடைத்திருக்கிறது. இந்த திட்டத்தை 23 மாவட்டங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் அலங்கார மீன் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. அலங்கார மீன்களை ஏற்றுமதி செய்வதற்காக, பெங்களூரில் ஹெசரகட்டாவில் மீன்குஞ்சு உற்பத்தி மையத்தைத் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. கடலில் விசைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவா்கள் டீசல் கொள்முதலுக்காக ரூ. 135 கோடியை மானியமாக அளித்து வருகிறோம். மீன்பிடித் தொழிலில் வந்துள்ள புதிய தொழில்நுட்பங்களை மீனவா்களுக்கு தெரிவிக்க கருத்தரங்குகள், பயிலரங்குகளை நடத்தி வருகிறோம் என்றாா்.

விழாவில் மீன்வளத் துறை அமைச்சா் கோட்டா சீனிவாஸ் பூஜாரி, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com