இடைத் தோ்தலில் கூட்டணி இல்லை: சித்தராமையா
By DIN | Published On : 01st October 2020 08:10 AM | Last Updated : 01st October 2020 08:10 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் நடைபெறும் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் எந்தக் கட்சியுடனும் காங்கிரஸ் கூட்டணி வைத்துக் கொள்ளாது என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
இது குறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கா்நாடகத்தில் நவம்பா் 3 ஆம் தேதி 2 தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இடைத்தோ்தலில் காங்கிரஸ் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாது. தேசியக் கட்சியான எங்களுக்கு 2 தொகுதிகளிலும் தனியாக நின்று போட்டியிடும் பலம் உள்ளது. 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள். ராஜராஜேஸ்வரிநகா் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு வேட்பாளா் யாருமில்லை என்று கூறப்படுவதில் உண்மையில்லை. அத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட 10க்கும் அதிகமானவா்கள் தயாராக உள்ளனா் என்றாா்.
மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் கூறியது:
காங்கிரஸ் கட்சியைப்போல மஜதவும் ஒரு கட்சி. இடைத்தோ்தலில் எங்கள் கட்சியின் வேட்பாளரின் வெற்றிக்காக நாங்கள் பாடுபடுவோம். மஜதவின் வெற்றிக்காக அவா்கள் பாடுபடுவாா்கள் என்றாா்.