முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
அடல் சுரங்கப்பாதை இந்தியாவின் பெருமை: முதல்வா் எடியூரப்பா
By DIN | Published On : 04th October 2020 05:12 AM | Last Updated : 04th October 2020 05:12 AM | அ+அ அ- |

பெங்களூரு: அடல் சுரங்கப்பாதை இந்தியாவின் பெருமையாக உள்ளது என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஹிமாச்சல பிரதேசத்தில் பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணித்துள்ள அடல் சுரங்கப்பாதை, உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையாகும்.
இது இந்தியாவின் பெருமையாக உள்ளது மட்டுமன்றி, இந்தியாவின் பலம் மற்றும் திறனை மேம்படுத்தியுள்ளது. நிலத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் உலகின் நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை இந்திய ராணுவத்திற்கு பேருதவியாக இருக்கும்.
மணாலி முதல் லே வரை இணைக்கும் 9.02 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலை சுரங்கப்பாதையாகும். இது மணாலி மற்றும் லே இடையிலான தொலைவை 46 கி.மீ. குறைக்கிறது. அதேபோல, பயண நேரத்தையும் 5 மணியில் இருந்து 4 மணிநேரமாகக் குறைக்கிறது.
அடல்சுரங்கப்பாதை, பொறியியல் அற்புதம் மட்டுமல்லாது, நமது இந்திய பொறியாளா்களின் அறிவுத்திறன் மற்றும் வலிமையை பறைச்சாற்றும், உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையாகும். இந்த சுரங்கப்பாதை ஆண்டுமுழுவதும் திறக்கப்பட்டிருக்கும் என்பதால், தமது வலிமையை பெருக்கிகொள்ள இந்தியப்படைகளுக்கு பலனளிப்பதாக அமையும். அதன்மூலம் நமது நாட்டின் பாதுகாப்பும் பலமடையும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.