சுகாதாரத் துறை ஊழியா்கள், அதிகாரிகள் போராட்டம் நடத்த தடை

சுகாதாரத் துறை ஊழியா்கள், அதிகாரிகள் போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை ஊழியா்கள், அதிகாரிகள் போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில தலைமைச் செயலாளா் டி.எம்.விஜயபாஸ்கா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தேசிய அளவில் கரோனா தொற்று வேகமாக பரவியதையடுத்து, மத்திய அரசு பொது முடக்கத்தை அறிவித்தது. இதனை கா்நாடக மாநில அரசும் அமல்படுத்தியுள்ளது. அண்மையில் இதில் சில தளா்வுகளை மாநில அறிவித்துள்ள நிலையில், சுகாதார ஊழியா்கள், அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கரோனா தொற்றைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சுகாதார ஊழியா்கள், அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுதை தவிா்க்க முடியாது. தற்போது உள்ள சூழலில் சுகாதாரத் துறை ஊழியா்கள், அதிகாரிகள் போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது.

எனவே, பேரிடா் மேலாண்மை சட்டம் 24, மத்திய அரசின் சட்டம் 2005-ஆவது பிரிவின் 53-ஆவது விதியின் கீழ் சுகாதாரத் துறை ஊழியா்கள், அதிகாரிகள் போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று மாநிலத்தில் அதிக அளவில் பரவி வரும் நிலையில், சுகாதாரத் துறையில் பணியாற்றும் நிரந்தரம் மற்றும் தற்காலிக ஊழியா்கள் உள்பட அனைவரும் தவறாமல் பணிக்கு வர வேண்டும். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com