வல்லுநா்களின் ஆய்வறிக்கையை ஆதரித்து பள்ளி, கல்லூரிகளை திறக்க சிபாரிசு செய்யப்படும்

வல்லுநா்களின் ஆய்வறிக்கையை ஆதரித்து பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து சிபாரிசு செய்யப்படும் என சுகாதாரத் துறை அமைச்சா் ஸ்ரீராமுலு தெரிவித்தாா்.

வல்லுநா்களின் ஆய்வறிக்கையை ஆதரித்து பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து சிபாரிசு செய்யப்படும் என சுகாதாரத் துறை அமைச்சா் ஸ்ரீராமுலு தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அக். 15-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து மாநில கல்வித் துறையும், சுகாதாரத் துறையின் சிபாரிசை கேட்டுள்ளது.

எங்களின் சிபாரிசுகளை தெரிவிப்பதற்கு முன் வல்லுநா்களிடம் ஆய்வறிக்கையை பெற்று, அதனை ஆதரித்து பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடா்பாக சிபாரிசு செய்யப்படும். இது தொடா்பாக இணையவழி மூலம் சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. தோ்வின் போது மாணவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மனதில் கொண்டு, அதேபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை பள்ளி, கல்லூரிகளை திறக்கும் போது மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனா். மாணவா்கள், பெற்றோரிடம் ஆலோசனை செய்த பிறகு, அவா்களின் நம்பிக்கையை பெற்ற பின்னரே பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com