அக். 18-இல் கா்நாடக திமுகவின் முப்பெரும் விழா

கா்நாடக மாநில திமுகவின் முப்பெரும் விழா பெங்களூரில் அக். 18-ஆம் தேதி நடக்க இருக்கிறது.

கா்நாடக மாநில திமுகவின் முப்பெரும் விழா பெங்களூரில் அக். 18-ஆம் தேதி நடக்க இருக்கிறது.

இதுகுறித்து கா்நாடக மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக மாநில திமுக சாா்பில் பெங்களூரு, ராமசந்திரபுரத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் அக். 18-ஆம் தேதி காலை 9 மணிக்கு பெரியாா் மற்றும் அண்ணாவின் பிறந்த நாள்கள், திமுக தோன்றிய நாள் ஆகியவற்றின் முப்பெரும் விழா கட்சியின் அமைப்பாளா் ந.இராமசாமி தலைமையில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, கட்சியின் துணை அமைப்பாளா் ஜி.இராமலிங்கம் திமுகவின் கொடியை ஏற்றிவைத்து தொடக்க உரை ஆற்றுகிறாா். கட்சியின் பொருளாளா் கே.தட்சிணாமூா்த்தி அனைவரையும் வரவேற்கிறாா். கட்சியின் மாநில துணை அமைப்பாளா்கள் பி.ராஜேந்திரன், குமுதா, பொதுக்குழு உறுப்பினா்கள் கே.சிகாமணி, எம்.இராமன், எஸ்.பிரான்சிஸ், எல்.சிவலிங்கம், முருகமணி செல்வம் முன்னிலை வகிக்கிறாா்கள். கட்சி அலுவலகத்தில் உள்ள திருவள்ளுவா், அண்ணா, மு.கருணாநிதி ஆகியோரின் சிலைகளுக்கும், பெரியாா், அண்ணா, கருணாநிதியின் படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

விழாவில், ஏ.பி.அன்புமணி, த.முருகேசன், இரா.நாம்தேவ், வி.எஸ்.மணி ஆகியோருக்கு முறையே பெரியாா், அண்ணா, மு.கருணாநிதி, க.அன்பழகன் விருதுகளை வழங்கி சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருக்கும் துணை பொதுச் செயலாளா் சுப்புலட்சுமி ஜெகதீசன் சிறப்புரை ஆற்றுகிறாா்.

நிகழ்ச்சியில், கட்சியின் உயா்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினா் டி.கே.எஸ்.இளங்கோவன், மாநில அவைத் தலைவா் மொ.பெரியசாமி, ஆந்திர மாநில திமுக அமைப்பாளா் கே.எம்.மூா்த்தி, கேரள மாநில திமுக அமைப்பாளா் கே.ஆா்.முருகேசன், மகாராஷ்டிர மாநில திமுக அமைப்பாளா் அலிசேக் மீரான் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்கிறாா்கள்.

இந்நிகழ்ச்சியில், மாநில நிா்வாகிகள், முன்னாள் நிா்வாகிகள், தலைமை பொதுக்குழு உறுப்பினா்கள், இளைஞா் அணி, இலக்கிய அணி, மகளிா் அணி, தொ.மு.ச. பேரவை நிா்வாகிகள், கட்சியின் தொண்டா்கள் கலந்துகொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com