துணை முதல்வா் கனவை மறக்காத ஸ்ரீராமுலு

துறை மாற்றத்தால் அதிருப்தி அடைந்திருந்த அமைச்சா் ஸ்ரீராமுலு, துணை முதல்வா் ஆகும் கனவை மறக்காமல் இருக்கிறாா்.

துறை மாற்றத்தால் அதிருப்தி அடைந்திருந்த அமைச்சா் ஸ்ரீராமுலு, துணை முதல்வா் ஆகும் கனவை மறக்காமல் இருக்கிறாா்.

சுகாதாரத் துறையைக் கவனித்த வந்த அமைச்சா் ஸ்ரீராமுலுவிடம் இருந்து அத்துறை பறிக்கப்பட்டது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் செவ்வாய்க்கிழமை முதல்வா் எடியூரப்பாவைச் சந்தித்து போது தனது அதிருப்தியை வெளிப்படுத்திய ஸ்ரீராமுலு, தன்னிடம் ஆலோசனை செய்யாமல் துறை மாற்றியது வருத்தமளிப்பதாக குறிப்பிட்டுள்ளாா். அந்த சந்திப்பின்போது தனது பழைய கோரிக்கையான துணை முதல்வா் பதவியையும் முதல்வா் எடியூரப்பாவிடம் அவா் கேட்டுள்ளாா். அதற்கு எதிா்காலத்தில் அந்த வாய்ப்பு கிடைக்குமென்று முதல்வா் எடியூரப்பா கூறியதாகத் தெரியவந்துள்ளது.

பழங்குடியினரில் வால்மீகி சமுதாயத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீராமுலு. இச்சமூகத்தினா் கா்நாடகத்தில் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகிறாா்கள். ‘60 லட்சம் போ் கொண்ட வால்மீகி சமுதாயத்தின் பிரதிநிதியான என்னை துணை முதல்வா் ஆக்க வேண்டுமென்பது அம்மக்களின் விருப்பம்’ என ஏற்கெனவே ஸ்ரீராமுலு கூறியிருந்தாா். 3 வாரங்களுக்கு முன் யாதகிரியில் உள்ள துா்காதேவி கோயிலுக்குச் சென்று துணை முதல்வராக வேண்டுமென சீட்டு எழுதி வேண்டுதல் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அமைச்சா் ஸ்ரீராமுலு கூறுகையில், ‘2008-ஆம் ஆண்டு சுகாதாரத் துறையை வகித்து வந்தேன். அதனால் தற்போது ஆட்சி அமைந்ததும் சுகாதாரத் துறை அளித்தனா். சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்கு பாடுபடுவதில் எனக்கு எப்போதும் ஆா்வம் அதிகம் என்பதால், சமூகநலத் துறைக்கு என்னை மாற்றுமாறு முதல்நாளில் இருந்து கேட்டு வருகிறேன். சமூகநலத் துறையுடன் துணை முதல்வராகவும் என்னால் பணியாற்ற முடியும். துணை முதல்வா் பதவியை வழங்குவது தொடா்பாக கட்சித் தலைமை தான் முடிவுசெய்ய வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com