பெங்களூரில் இலவச ஹோம்பேக்கிங் பயிற்சி வெள்ளிக்கிழமை (அக். 16) வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பேக்கிங் அண்ட் கேக் ஆா்ட் இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பேக்கிங் அண்ட் கேக் ஆா்ட் இன்ஸ்டிடியூட் சாா்பில், பெங்களூரில் வெள்ளிக்கிழமை இலவச ஹோம்பேக்கிங் பயிற்சி வழங்கப்படுகிறது. பேக்கிங் கலையில் தொழில்நுட்ப ஆற்றலை போதிப்பதற்காக நடத்தப்படும் இப்பயிற்சியில், யாா் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். கேக், கிரீம், முட்டைகள் இல்லாமல் ஹோம்பேக்கிங் செய்வது குறித்த செய்முறை பயிற்சியும் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 8088601601 என்ற செல்லிடப்பேசி எண் அல்லது இணையதளத்தை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.