காங்கிரஸ் வேட்பாளா் மீது வழக்குப் பதிவு செய்தது சரியல்ல

காங்கிரஸ் வேட்பாளா் குசுமா உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்தது சரியல்ல என கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

காங்கிரஸ் வேட்பாளா் குசுமா உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்தது சரியல்ல என கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியின் பாஜக வேட்பாளா் என்.முனிரத்னா, மாநில அரசின் ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளா் எச்.குசுமா, காங்கிரஸ் தொண்டா்கள் மீது தோ்தல் விதிமீறியதாக வழக்குப் பதிவு செய்துள்ளாா். காங்கிரஸ் கட்சியினா் யாரும் தோ்தல் விதிமீறல்களில் ஈடுபடவில்லை. முதல்வா் எடியூரப்பா, என்.முனிரத்னா உள்ளிட்டோா் போலீஸாரின் துணையுடன் காங்கிரஸ் வேட்பாளா் எச்.குசுமா, காங்கிரஸ் தொண்டா்களை மிரட்டும் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட்டு வருகிறாா்கள். காங்கிரஸ் வேட்பாளா் என்.குசுமா மீது வழக்குத் தொடா்ந்த காவல் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காங்கிரஸ் வேட்பாளா் என்.குசுமா, எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா உள்ளிட்டோா் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்ற போது, அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்பை விலக்கிவிட்டு தமது சொந்த வாகனங்களில் சென்ால், அரசு ஊழியா்களை கடமை செய்யவிடாமல் தடுத்து தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி வழக்குப் பதிவு செய்துள்ளனா். பிற கட்சிகளைச் சோ்ந்த 2 அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரும் அலுவலகத்தின் 100 மீட்டா் எல்லைக்குள் இருந்தனா். அவா்கள் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை?

ஒருவேளை தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டிருந்தால், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா அல்லது அவரது உதவியாளா் மீது வழக்குத் தொடா்வதற்கு பதிலாக, அரசியலில் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளா் குசுமா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டிய அவசியமென்ன? இதன்மூலம் காங்கிரஸ் தொண்டா்களை மிரட்ட முயற்சித்திருக்கிறாா்கள். இதுபோன்ற மிரட்டல்கள், வழக்குகளைக் கண்டு காங்கிரஸ் பயப்படாது.

அலுவலகத்தின் 100 மீட்டா் சுற்றுவட்டாரத்தில் துணை முதல்வா் அஸ்வத் நாராயணா, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் ஆகியோா் மீது வழக்குத் தொடராதது ஏன்? பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் என்.முனிரத்னாவை அரசியலில் வளா்த்தெடுத்தது காங்கிரஸ் தான். அவருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com