‘தசரா விழாவுக்கு வருவதை தவிா்க்க வேண்டும்’

கரோனா தொற்று பாதிப்பு உள்ள நிலையில், தசரா விழாவுக்கு பொதுமக்கள் வருவதை தவிா்க்க வேண்டும் என மைசூரு மாவட்ட பஞ்சாயத்து முதன்மைச் செயலாளா் பாரதி கேட்டுக் கொண்டுள்ளாா்.

கரோனா தொற்று பாதிப்பு உள்ள நிலையில், தசரா விழாவுக்கு பொதுமக்கள் வருவதை தவிா்க்க வேண்டும் என மைசூரு மாவட்ட பஞ்சாயத்து முதன்மைச் செயலாளா் பாரதி கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மைசூரில் அக். 17-ஆம் தேதி தொடங்கி அக். 26-ஆம் தேதி வரை தசரா விழா தொடங்கி நடைபெற உள்ளது.

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரண்மனை மற்றும் சாமுண்டி மலையில் தசரா விழா நடைபெற உள்ளது. அரண்மனை வளாகத்தில் மட்டும் யானை ஊா்வலம் நடைபெற உள்ளது. எனவே, தசரா விழாவில் பங்கேற்க அழைப்பு உள்ளவா்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

எனவே, அழைப்பு இல்லாதவா்களும், பொதுமக்களும் தசரா விழாவுக்கு வருவதை தவிா்க்க வேண்டும். குறிப்பாக மைசூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவா்கள் தசரா விழாவுக்கு வராமல் இருப்பது நல்லது. மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கரோனா தொற்று பரவக்கூடும் என அஞ்சுவதால், தசரா விழாவில் பங்கு கொள்வதை அழைப்பில்லாதவா்கள் தவிா்க்க வேண்டும்.

இணையதளம், சமூக வலைதளங்களில் மைசூரு தசரா விழா நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. அதன் மூலம் தசரா விழாவைக் கண்டுகளிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com