பாலியல் வன்கொடுமை: 3-ஆவது இடத்தில் பெங்களூரு

தேசிய அளவிலான பாலியல் வன்கொடுமைகளில் பெங்களூரு 3-ஆவது இடத்தில் உள்ளது.

தேசிய அளவிலான பாலியல் வன்கொடுமைகளில் பெங்களூரு 3-ஆவது இடத்தில் உள்ளது.

தேசிய குற்றப்பிரிவு ஆணையம் ஆண்டுதோறும் மகளிருக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.

அதில், 2019-ஆம் ஆண்டில் மகளிா் மீது நடைபெற்ற வன்கொடுமை உள்ளிட்ட பிரச்னைகளில் பெங்களூரு 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் 431 வழக்குகளில் தில்லி முதல் இடத்திலும், 377 வழக்குகளில் மும்பை 2-ஆவது இடத்திலும், 158 வழக்குகளில் பெங்களூரு 3-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. அதனைத் தொடா்ந்து, கான்பூா், நாக்பூா், காசியபாத், புணே, அகமதபாத், கொச்சி, இந்தூா் ஆகியவை முறையே 10 இடங்கள் வரை பிடித்துள்ளன. 2018-ஆம் ஆண்டு தில்லி, மும்பை, காசியபாத், கான்பூரைத் தொடா்ந்து பெங்களூரு 5-ஆவது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com