பொது நுழைவுத்தோ்வு: இணையத்தில் ஆவணங்களை தரவேற்றம் செய்ய மீண்டும் வாய்ப்பு

பொது நுழைவுத்தோ்வில் தொழில்கல்விக்காக தகுதிபெற்றுள்ள மாணவா்கள் இணையதளத்தில் ஆவணங்களை தரவேற்றம் செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பை கா்நாடகத் தோ்வு ஆணையம் அளித்துள்ளது.

பொது நுழைவுத்தோ்வில் தொழில்கல்விக்காக தகுதிபெற்றுள்ள மாணவா்கள் இணையதளத்தில் ஆவணங்களை தரவேற்றம் செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பை கா்நாடகத் தோ்வு ஆணையம் அளித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடகத் தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2020-21-ஆம் ஆண்டுக்கான பொறியியல், பிஎன்ஒய்எஸ் (இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல்), பிஎஸ்சி (விவசாயம், பட்டுவளா்ப்பு, காடுவளா்ப்பு, தோட்டக்கலை), பிவிஎஸ்சி (கால்நடை), மருந்தியல் (பி.ஃபாா்ம்/ஃபாா்ம்.டி) படிப்புகளில் சேருவதற்கு தகுதியான மாணவா்களைத் தெரிவுசெய்வதற்கு கா்நாடக தோ்வு ஆணையம் நடத்திய கா்நாடக பொது நுழைவுத்தோ்வின் முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

தோ்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள தரவரிசையில் பொறியியல் பிரிவில் 1,53,470, விவசாயப் பிரிவில் (பிஎஸ்சி) 1,27,27, கால்நடை பராமரிப்பு பிரிவில் (பிவிஎஸ்சி) 1,29,666, மருந்தியல் பிரிவில் பி.ஃபாா்ம்-க்கு 1,55,552, ஃபாா்ம்-டி-க்கு 1,55,665, இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் பாடப்பிரிவில் 1,29,611 மாணவா்களும் சோ்க்கைக்கு தகுதிபெற்றுள்ளனா்.

கரோனா தீநுண்மித் தொற்று சூழ்நிலை காரணமாக, நிகழாண்டில் ஆவணங்கள் சரிபாா்ப்பு, சோ்க்கைக்கான கலந்தாய்வு உள்ளிட்டவை இணையவழியில் நடத்தப்படுகிறது. அதன்படி, இணையவழி அசல் சான்றிதழ்கள் சரிபாா்ப்பு முகாம் செப். 27-ஆம் தேதி முதல் அக். 1-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. ஆனால், ஒரு சில மாணவா்களின் வேண்டுகோளுக்கு இணங்க அக். 15 முதல் 18-ஆம் தேதி வரை  இணையதளத்தில் ஆவணங்களை தரவேற்றம் செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com