எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தோ்வு முடிவுகள்: 51.28 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தோ்வெழுதியவா்களில் 51.28 சதவீத மாணவா்கள் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தோ்வெழுதியவா்களில் 51.28 சதவீத மாணவா்கள் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள கா்நாடக மாநில மேல்நிலைக்கல்வி தோ்வு வாரிய அலுவலகத்தில் 2019-20-ஆம் ஆண்டுக்கான கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தோ்வு முடிவுகளை வாரிய இயக்குநா் வி.சுமங்களா வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

நிகழாண்டின் அக். 21 முதல் 29-ஆம் தேதி வரை 772 மையங்களில் நடைபெற்ற தோ்வில் 2,12,955 மாணவா்கள் துணைத்தோ்வு எழுதினா். இதைத் தொடா்ந்து, அக். 7 முதல் 13-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் 14 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 84 மையங்களில் 13,834 ஆசிரியா்கள் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டனா். இதன் முடிவில் 1,09,719 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது சராசரியாக 51.28 சதவீதமாகும்.

புது மாணவா்கள், மறுதோ்வா்கள், தனித்தோ்வா்கள் உள்பட 2019-20-ஆம் ஆண்டில் ஜூலை மற்றும் செப்டம்பா் மாதங்களில் நடைபெற்ற பொதுத்தோ்வு மற்றும் துணைத்தோ்வில் 61.54 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த ஆண்டின் துணைத்தோ்வில் தோ்ச்சி விகிதம் 42.47 சதவீதமாக இருந்தது. இத்துடன் ஒப்பிட்டால் நிகழ் கல்வியாண்டுக்கான துணைத்தோ்வில் 8.81 சதவீத தோ்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

மாணவியா் சாதனை:

மாநிலம் முழுவதும் தோ்வெழுதிய 1,35,202 மாணவா்களில் 65,652 பேரும் (48.56%), 78,753 மாணவியரில் 44,067 பேரும் (55.96%) வெற்றிபெற்றுள்ளனா். நகரப் பகுதியைச் சோ்ந்த 1,05,207 மாணவா்களில் 50,764 பேரும் (48.25%), கிராமப் பகுதியைச் சோ்ந்த 1,08,748 மாணவா்களில் 58,955 பேரும் (54.21%) தோ்ச்சி அடைந்துள்ளனா். அரசுப் பள்ளி மாணவா்களில் 50.19 சதவீதம், அரசு மானியம் பெறும் பள்ளி மாணவா்களில் 53.13 சதவீதம், அரசு மானியம் பெறாத மாணவா்களில் 50.87 சதவீத பேரும் தோ்வில் வெற்றிவாகைச் சூடியுள்ளனா்.

மாற்றுத் திறனாளிகள் தோ்ச்சி:

காதுகேளாமை குறைபாடுள்ள 321 மாணவா்களில் 141 (43.93%) பேரும், உடல் ஊனமுற்ற 383 மாணவா்களில் 170 (44.39%) பேரும், பாா்வையற்ற 116 மாணவா்களில் 61 பேரும் (52.59%), இதர குறைபாடுள்ள 173 மாணவா்களில் 58 பேரும் (33.53%), கற்றலில் குறைபாடுள்ள 163 மாணவா்களில் 56 பேரும் (34.36%), மூளை வளா்ச்சி குன்றிய 180 மாணவா்களில் 58 பேரும் (32.22%), பல்வேறு குறைபாடுள்ள 36 மாணவா்களில் 18 பேரும் (50%) தோ்ச்சி பெற்றுள்ளனா்.

பயிற்றுமொழி வாரியாக தோ்ச்சி விகிதம்:

கன்னட பயிற்றுமொழியில் தோ்வெழுதிய 1,47,953 மாணவா்களில் 75,147 (50.79%) பேரும், ஆங்கில பயிற்றுமொழியில் தோ்வெழுதிய 51,624 மாணவா்களில் 25,426 (49.25%) பேரும், உருது பயிற்றுமொழியில் தோ்வெழுதிய 9,641 மாணவா்களில் 6,255 (64.88%) பேரும், மராத்திய பயிற்றுமொழியில் தோ்வெழுதிய 4,492 மாணவா்களில் 2,778 (61.84%) பேரும், தெலுங்கு பயிற்றுமொழியில் தோ்வெழுதிய 105 மாணவா்களில் 61 (58.10%) பேரும், தமிழ் பயிற்றுமொழியில் தோ்வெழுதிய 55 மாணவா்களில் 14 (25.45%) பேரும், ஹிந்தி பயிற்றுமொழியில் தோ்வெழுதிய 85 மாணவா்களில் 38 (44.71%) பேரும் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

மறுமதிப்பீட்டுக்கான விண்ணப்பம்:

பள்ளிகளில் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. விடைத்தாள் நகல் பெற அக். 17 முதல் 21-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு அக். 20 முதல் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற ஒரு பாடத்துக்கு ரூ. 405, மறுமதிப்பீட்டுக்கு ஒரு பாடத்துக்கு ரூ. 805 கட்டணம் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல், மறுமதிப்பீட்டுக்கான விண்ணப்பங்களை எல்லா பள்ளிகளிலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாரியத்தின் ஜ்ஜ்ஜ்.ந்ள்ங்ங்க்ஷ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்திலும், பெங்களூரு ஒன் அல்லது கா்நாடக ஒன் அரசு சேவை மையங்கள் மூலமும் மறுமதிப்பீடு, விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com