காவிரி தீா்த்தோற்சவ கொண்டாட்டம்

காவிரி தீா்த்தோற்சவம் சனிக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

பெங்களூரு: காவிரி தீா்த்தோற்சவம் சனிக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

குடகு மாவட்டம், பாகமண்டலாவில் உள்ள பகண்டேஸ்வரா தலைக்காவிரி கோயிலில் சனிக்கிழமை காலை 7.04 மணிக்கு காவிரி புனித தீா்த்தோற்சவம் நடைபெற்றது. காலை 4.40 மணி முதல் நடைபெற்ற சிறப்புப் பூஜையை கோபாலகிருஷ்ண ஆச்சாா், பிரசாந்த் ஆச்சாா் ஆகியோா் நடத்தி வைத்தனா்.

இந்த உற்சவத்தில், வீட்டுவசதித் துறை அமைச்சா் வி.சோமண்ணா, பாஜக எம்.எல்.ஏ. அப்பச்சுரஞ்சன், எம்.எல்.சி. சுனில்குமாா், மாவட்ட ஆட்சியா் ஆனீஸ் கே.ஜாய், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் க்ஷாமா மிஸ்ரா உள்ளிட்ட 300 போ் கலந்துகொண்டனா். சிறப்புப் பூஜையின் முடிவில், காவிரி ஆற்றின் நீா், அங்கு திரண்டிருந்த அனைவா் மீதும் தெளிக்கப்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த பக்தா்கள் ‘காவிரி ஆறே பாய்ந்து வா’ என முழக்கமிட்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் வி.சோமண்ணா கூறியதாவது:

கரோனாவை எதிா்கொள்ளும் சக்தியையும், இயற்கைப் பேரிடா்களில் இருந்து மக்களைக் காக்கவும் காவிரி அம்மனிடம் வேண்டிக்கொண்டேன். காவிரி ஆற்றில் நீராடுவதற்கு அனுமதி அளிக்கவில்லை. கரோனா காரணமாக, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் உள்ளதால், அதிகமானோரை விழாவுக்கு அனுமதிக்க இயலவில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com