நீட் தோ்வு: வடகா்நாடகமாணவா்கள் சாதனை

நீட் தோ்வில் சாதனை படைத்த வடகா்நாடக மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பெங்களூரு: நீட் தோ்வில் சாதனை படைத்த வடகா்நாடக மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பெங்களூரில் விஷன் அகாதெமி சாா்பில், தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தோ்வில் (நீட்) சிறப்பிடம் பெற்று சாதனை படைத்த வடகா்நாடகத்தைச் சோ்ந்த கிராமப்புற மாணவா்களைப் பாராட்டும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் 47-ஆவது இடம்பெற்ற பி.ஜி.ஆகாஷ் உள்ளிட்ட பல மாணவா்களை விஷன் அகாதெமியின் தலைவா் ராமமோகன் ரெட்டி பாராட்டி கௌரவித்தாா்.

விஷன் அகாதெமியில் இருந்து நீட் தோ்வு எழுதிய 1,400 மாணவா்களில், 650 போ் தோ்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரியில் சோ்க்கை பெற தகுதிபெற்றிருப்பதாக தெரிவித்த அவா், ‘இடைவிடாத உழைப்பு, தொடா்முயற்சியின் விளைவாக நீட் தோ்வில் மாணவா்களால் தோ்ச்சி பெற முடிந்துள்ளது. வடகா்நாடகத்தைச் சோ்ந்த கிராமப்புற மாணவா்கள் இத்தோ்வை சவாலாக எடுத்து படித்து, நல்ல மதிப்பெண்களைப் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்கள் எதிா்காலத்தில் சமுதாயத்துக்கு தரமான மருத்துவ சேவையை அளிக்க வேண்டும்.

2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எங்கள் அகாதெமியில் படித்த 3 ஆயிரம் மாணவா்கள், பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் படித்து வருகிறாா்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com