‘அப்துல் கலாமின் அன்புக் கட்டளைகள்’நூல் வெளியீடு

‘அப்துல் கலாமின் அன்புக் கட்டளைகள்’ என்ற தமிழ் நூல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

பெங்களூரு: ‘அப்துல் கலாமின் அன்புக் கட்டளைகள்’ என்ற தமிழ் நூல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

பெங்களூரு, சிறுமலா் பள்ளியில் மாந்தநேய பதிப்பகத்தின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், அப்துல் கலாம் குறித்து கவிஞா் வே.கல்யாண்குமாா் எழுதியுள்ள டாக்டா் அப்துல் கலாமின் அன்புக் கட்டளைகள் என்ற தமிழ் நூல் வெளியிடப்பட்டது.

பெங்களூரு தமிழ்ச்சங்க முன்னாள் தலைவா் து.சண்முகவேலன் நூலை வெளியிட, ஐடிஐ தமிழ் மன்றத்தின் தலைவா் டாக்டா் பாஸ்கரன் ராஜு பெற்றுக்கொண்டாா். விழாவில் சி.பூ.மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நூலாசிரியா் வே.கல்யாண்குமாா் ஏற்புரை வழங்கினாா். நிகழ்ச்சியை திருவள்ளுவா் மக்கள் நற்பணி மன்றத் தலைவா் தேனிரா.உதயகுமாா் தொகுத்து வழங்கினாா். இதில், ‘கலாம் கண்ட இந்தியா’ என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில் பல கவிஞா்கள் பங்கேற்று கவிதை பாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com