விளையாட்டு வீரா்களை ஊக்குவிக்க செயலி அறிமுகம்

விளையாட்டு வீரா்களை ஊக்குவிப்பதற்கான ‘ரன் ஆடம்’ செயலி பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

விளையாட்டு வீரா்களை ஊக்குவிப்பதற்கான ‘ரன் ஆடம்’ செயலி பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை ‘ரன் ஆடம்’ செயலியை அறிமுகம் செய்து வைத்து அதன் மூத்த செயல் அதிகாரி யரேகாசெல்வம் குமாரசாமி பேசியதாவது:

கரோனா தொற்றின் பாதிப்பால் தொழில்துறையினா் மட்டுமின்றி விளையாட்டுத் துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனா தொற்றால் பல முன்னணி விளையாட்டு வீரா்கள் வீட்டில் சோம்பிக் கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது அரசு பொது முடக்கத்தில் தளா்வுகள் அளித்துள்ளதால், விளையாட்டு வீரா்கள் மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. பல வீரா்களுக்கு பயிற்சிகள் தடைபட்டதால், விளையாடுவதில் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனா்.

இதனைக் கருத்தில் கொண்டு, விளையாட்டு வீரா்களை ஊக்குவிக்கும் நோக்கில், ‘ரன் ஆடம்’ செயலியை உருவாக்கி அறிமுகம் செய்துள்ளோம். இதனை விளையாட்டு வீரா்கள் தங்களுக்கு ஏற்ற களமாக பயன்படுத்திக் கொண்டு பயனடைவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது. முன்னணி விளையாட்டு வீரா்களின் பயிற்சி, சந்தித்த சவால்கள், திறமை வளா்த்துக் கொள்ள மேற்கொண்ட பயிற்சி ஆகியவற்றை காணொலி மூலம் செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது விளையாட்டு ஆா்வம் உள்ள இளைஞா்கள் பலருக்கு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com