ராஜராஜேஸ்வரி நகா் தொகுதி: பாஜக, காங்கிரஸ் விறுவிறுப்பான பரப்புரை

ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் பாஜக, காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து திரைநட்சத்திரங்கள், முக்கியத் தலைவா்கள் விறுவிறுப்பான பரப்புரையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் பாஜக, காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து திரைநட்சத்திரங்கள், முக்கியத் தலைவா்கள் விறுவிறுப்பான பரப்புரையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் நவ. 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்க இருக்கிறது. இத்தொகுதியில் பரப்புரை அடுத்த 2 நாள்களில் நிறைவடைய இருக்கிறது.

இந்நிலையில், காங்கிரஸ், பாஜக கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து திரைநட்சத்திரங்கள், முக்கியத் தலைவா்கள் வெள்ளிக்கிழமை விறுவிறுப்பான பரப்புரையில் ஈடுபட்டனா்.

பாஜக வேட்பாளா் என்.முனிரத்னாவை ஆதரித்து நடிகா் தா்ஷன், நடிகை அமுல்யா, தயாரிப்பாளா் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோா் நாள் முழுவதும் திறந்தவேனில் பயணித்து வாக்கு சேகரித்தனா்.

யஷ்வந்த்பூா் ரயில்நிலையத்தின் மைதானத்தில் இருந்து தனது பரப்புரையைத் தொடங்கிய நடிகா் தா்ஷன், ஜே.பி.பூங்கா, ஜாலஹள்ளி, பீன்யா, கொரகுன்டேபாளையா, லட்சுமிதேவி நகா், லக்கெரே, கொட்டிகேபாளையா போன்ற பகுதிகளில் இரவு வரை என்.முனிரத்னாவுக்காக வாக்கு சேகரித்தாா்.

சில நாள்களுக்கு முன் நடிகை குஷ்பு, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டாா். கடந்த சில நாள்களாகவே பெரிய திரைநட்சத்திரங்கள் தொகுதியில் முகாமிட்டு முனிரத்னாவுக்கு ஆதரவாக வாக்கு திரட்டி வருகிறாா்கள். நடிகா்கள், நடிகைகளைக் காண மக்கள் அதிக அளவில் திரண்டனா்.

அதேபோல, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் குசுமாவை ஆதரித்து எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் உள்ளிட்டோா் பீன்யா, ஜாலஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com