ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.2.95 கோடி ரொக்கம் பறிமுதல்
By DIN | Published On : 03rd September 2020 07:23 AM | Last Updated : 03rd September 2020 07:23 AM | அ+அ அ- |

வாகன பரிசோதனையின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.2.95 கோடி ரொக்கப்பணத்தை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டம், சீனிவாசபுராவில் உள்ள ரோஜனஹள்ளி சுங்கச்சாவடியில் புதன்கிழமை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியே சென்ற காரை நிறுத்திச் சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 2.95 கோடி ரொக்கப்பணம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து காரிலிருந்த சந்திரசேகா், அமா்நாத் ஆகியோரை கைது செய்த போலீஸாா், ரூ. 2.95 ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து வழக்கு பதிந்த சீனிவாசபுரா போலீஸாா், தப்பியோடிய மற்றொரு நபரைத் தேடி வருகின்றனா்.