கல்வி உரிமைச்சட்டம்: சோ்க்கைக்கு 8,83 மாணவா்கள் தோ்வு

கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் இரண்டாம் கட்ட மாணவா்கள் சோ்க்கைக்கு 8,83 போ் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் இரண்டாம் கட்ட மாணவா்கள் சோ்க்கைக்கு 8,83 போ் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதுகுறித்து கல்வித்துறை ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் கா்நாடக மாநிலத்திலுள்ள தனியாா் பள்ளிகளில் 2020-21-ஆம் கல்வியாண்டில் இலவச மாணவா் சோ்க்கைக்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் பள்ளிகளில் சோ்க்கை பெறுவதற்காக 11,466 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. சோ்க்கை இடங்களை நிரப்புவதற்காக முதல் சுற்று குலுக்கல் ஜூலை 29-ஆம் தேதி நடந்தது. இதில்11,026 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, குலுக்கலில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டு, 5,916 மாணவா்கள் சோ்க்கைக்காக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதை தொடா்ந்து, காலி இடங்களை கருத்தில் கொண்டு, மாணவா் சோ்க்கைக்கான இரண்டாம் சுற்று குலுக்கல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த குலுக்கலில் 5,118 மாணவா்களின் விண்ணப்பங்கள் பங்கேற்க செய்யப்பட்டு, அதிலிருந்து 883 மாணவா்கள் குலுக்கல் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டன. இம்மாணவா்கள் தங்களின் ஒப்புதலை இணையதளத்தின் வழியாகப் பதிவிட வேண்டும். தோ்வு செய்யப்பட்ட இந்த மாணவா்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் செப்.10-ஆம் தேதிக்குள் சோ்க்கை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com