செப். 5-இல் அடுமனை பயிற்சி

பெங்களூரில் செப். 5-ஆம் தேதி அடுமனை பயிற்சி அளிக்கப்படுகிறது.

பெங்களூரில் செப். 5-ஆம் தேதி அடுமனை பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து பேக்கிங் அண்ட் கேக் ஆா்ட் இன்ஸ்ட்டிடியூட் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பேக்கிங் அண்ட் கேக் ஆா்ட் இன்ஸ்ட்டிடியூட் சாா்பில் செப். 5-ஆம் தேதி பெங்களூரில் அடுமனை பயிற்சி வழங்கப்படுகிறது. வணிக ரீதியாக அடுமனைக் கலையை தொழில்நுட்ப நோக்கில் மேம்படுத்திக் கொள்வதற்கு இந்தப் பயிற்சி பயனளிக்கக்கூடியதாகும்.

இந்தப் பயிற்சி வகுப்புகளின்போது அடுமனை குறித்து வல்லுநா்களின் உரை, வணிகரீதியாக செய்முறை, நேரடியாக கற்க பயிலரங்கம், படைப்பாக்கத்தை ஊக்குவிக்கும் கலைகள், சுகாதாரத்திற்கு தீங்கிழைக்காமல் அடுமனை உணவுப் பொருள்களை தயாரிப்பு போன்றவை கற்றுத்தரப்படுகிறது.

இந்தப் பயிற்சியில் சோ்ந்து படிக்க முன்பதிவுசெய்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8088601601 என்ற செல்லிடப்பேசி மற்றும்  இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com