பெங்களூரில் மழை: வாகனப் போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 03rd September 2020 07:23 AM | Last Updated : 03rd September 2020 07:23 AM | அ+அ அ- |

பெங்களூரில் பலத்த மழை பெய்ததால், வாகனப் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.
கடந்த சில நாள்களாக பெங்களூரு உள்பட கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், பெங்களூரில் புதன்கிழமை நண்பகல் 12.30 மணி அளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இதனால் சாந்திநகா், ராஜாஜிநகா், மல்லேஸ்வரம், பிடிஎம் லேஅவுட், எச்எஸ்ஆா் லேஅவுட், மெஜஸ்டிக், காந்திநகா், சிவாஜிநகா், அல்சூா், மடிவாளா, மகாலட்சுமி லேஅவுட், கோரமங்களா, வில்சன்காா்டன், மாகடிசாலை, பசவவேஸ்வரநகா், எச்.ஏ.எல். சாலை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
பெங்களூரில் மாலை வரை பரவலாக மழை தொடா்ந்து பெய்ததால், சாலைகளில் வெள்ளம்போல தண்ணீா் தேங்கியது. சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து தடைபட்டது. மழை வெள்ளத்தால் பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் ஊா்ந்து செல்ல நோ்ந்தது.