நாளை முதல் குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்து சேவை தொடக்கம்

பெங்களூரில் குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்து சேவையை தொடங்க பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

பெங்களூரில் குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்து சேவையை தொடங்க பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா தீநுண்மித் தொற்றுநோய் பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் தளா்த்தப்பட்டுள்ள சூழலில், பயணிகளின் வசதிக்காக முன்னெச்சரிக்கையுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வா்த்தக, தொழில் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதால் பெங்களூரு மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

பொதுமக்களின் போக்குவரத்து தேவையை நிறைவு செய்யும் நோக்கில், செப்.7-ஆம் தேதி முதல் 34 ‘வஜ்ரா’ குளிரூட்டப்பட்ட பேருந்து சேவைகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கெம்பே கௌடா பேருந்து நிலையத்தில் இருந்து வி - 317ஏ எண் கொண்ட பேருந்து ஹொசகோட்டேவுக்கு 20 முறைகளும்; வி-360பி எண் கொண்ட பேருந்து அத்திப்பள்ளிக்கு 16 முறைகளும்; வி - 335இ எண் கொண்ட பேருந்து கடுகோடிக்கு 40 முறைகளும் இயக்கப்படுகின்றன.

அதேபோல, பனசங்கரி பேருந்து நிலையத்தில் இருந்து ஹெப்பாள் பகுதிக்கு வி- 500 ஏ எண் கொண்ட பேருந்து 24 முறைகளும்; மத்திய பட்டுவாரிய அலுவலகத்தில் இருந்து ஹெப்பாள் பகுதிக்கு வி - 500டி எண் கொண்ட பேருந்து 24 முறைகளும்; பனசங்கரி பேருந்து நிலையத்தில் இருந்து ஐ.டி.பி.எல். பகுதிக்கு வி - 500 சிஏ எண் கொண்ட பேருந்து 24 முறைகளும் ஆக மொத்தம் 34 பேருந்துகள் 148 முறைகள் இயக்கப்படவிருக்கின்றன.தினமும் காலை 6 மணி முதல் இரவு 8.50 மணி வரை பேருந்து சேவை கிடைக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com