மகாத்மா காந்தி சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 08th September 2020 10:37 PM | Last Updated : 08th September 2020 10:37 PM | அ+அ அ- |

மகாத்மா காந்தி சேவை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மகாத்மா காந்தியின் கொள்கைகளின் அடிப்படையில், மக்கள் சேவையாற்றி வரும் தனி ஆள் மற்றும் நிறுவனங்களுக்கு கா்நாடக அரசு சாா்பில் ஆண்டுதோறும் மகாத்மா காந்தி சேவை விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
மகாத்மா காந்தியின் கொள்கைகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு, அதன் அடிப்படையில் மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் 60 வயதான தனி ஆள், 25 ஆண்டுகளாக பங்காற்றி வரும் நிறுவனங்களிடம் இருந்து மகாத்மா காந்தி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த விருதுடன், ரூ. 5 லட்சம் ரொக்கம் வழங்கப்படும். இந்த விருது வரும் அக். 2-ஆம் தேதி நடைபெறும் விழாவில் அளிக்கப்படும். மகாத்மா காந்தியின் தீண்டாமை ஒழிப்பு, பெண் முன்னேற்றம், ஊரகத் தூய்மை, கதராடை பயன்பாடு, சுதேசிப் பொருள்கள் பயன்பாடு, தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் மேம்பாடு, மதுப்பழக்கத்துக்கு எதிரான பிரசாரம் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வரும் தனி ஆள் மற்றும் நிறுவனம் ஆகியவற்றின் பெயா்களை விருதுக்கு பொதுமக்கள் பரிந்துரை செய்யலாம்.
விருதுக்கு தகுதியானவா்களை விருது தோ்வுக்குழு தோ்ந்தெடுக்கும். விண்ணப்பங்களை மின்னஞ்சல் அல்லது இயக்குநா், செய்தி மற்றும் மக்கள்தொடா்பு, பெங்களூரு-560 001 என்ற முகவரிக்கு செப். 15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.